செய்தி: “கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” - உயிரி எரிவாயு திட்டத்திற்கான இடந்தேடல் குறித்து ‘மெகா’ வெளியிட்டுள்ள பொதுப்பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re: சகோதரர் லுக்மான் ரசாக் அவர்களே ... இது உங்களுக்கு ... posted byHameed Rifai (Kayalpatnam)[27 October 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 31012
சகோதரர் லுக்மான் ரசாக் அவர்களே ... இது உங்களுக்கு ...
< ஆனால் நீங்கள் போற்றும் தலைவி அவர்கள், 09.08.2012-ல், ஐக்கிய பேரவை உட்பட அனைத்து ஜமாஅத்திற்கும் எழுதிய கடிதம், மக்கள்
மறந்து இருப்பார்கள் என்ற நினைப்பா?
அந்த கடிதம் கொடுத்த நேரத்தில், ஊரில் புறம்போக்கு நிலம் இருப்பது, இந்த தலைவிக்கு தெரியாதா? > C & P
நல்ல கேள்வி. முகவரி மாறி வந்த கேள்வி. ஐந்து லட்சம் பரிசா கொடுக்கலாம். ஊர நாட்டாமை பண்ணிட்டு இருக்கிற சில பெரிய மனுஷர்களுக்கு
இன்னிக்கி வரைக்கும் புறம்போக்கு நிலங்கள் ஊரில எங்கிருக்குன்னு தெரியிலை. இந்த சேர்மன் பதவிக்கு வந்த 12 மாசத்திலேயே - புறம்போக்கு
லிஸ்டை நோண்டி எடுத்தாங்களே. அத பாராட்டுவீங்களா , அத உட்டுட்டு ... இப்பதான் தெரியுமோன்னு கேள்வி வேற?! சாரே, பல பேர்,
அதக்கூட தெரியாம 5 வருசத்த முடிச்சுட்டு போயிருக்காங்க, அவங்கட்ட கேளுங்க உங்க கேள்விய
< இந்த இரண்டு திட்டமும் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டுமா? அல்லது வெவ்வேறு இடங்களில் இருந்தால் பரவாயில்லையா? > C &
P
அற்புதமான கேள்வி ... ஒரே இடத்தில இருந்தா நல்லது, சாலை வசதி, மின்சார வசதி, மக்கள் பகுதிக்கு பக்கத்தில அமைந்து ... எல்லாம்
கூடிவந்தா ... இல்லன்னா பிரிக்கத்தான் செய்யனும் ... அது ஒன்னும் சீரியஸ் மேட்டர் இல்ல ... பயப்படாதீங்க ... இரண்டும், தனி தனியா
தான் பிறந்துச்சு, இரட்டை குழந்தை இல்லை ...
தலைவி, கொஞ்ச மாசம் இரண்டும் சேர்ந்தாப்பில அமையுமானா பார்த்தாங்க, அமையலே, ஊர் நாட்டாமைகள் 278, 278, 278, 278, 278 ன்னு
பழைய பல்லவியை தான் பாடிட்டு இருந்தாங்க .. இரண்டு திட்டத்தையும் பிரிச்சிட்டு, அவசரமா தேவைப்படுற பயோ காஸ் திட்டத்துக்கு மட்டும்
இப்பம் இடம் தேடுறாங்க. புரிஞ்சுதா? அதெப்படி புரியும் ... 278... 278... 278 ...
< (ஒரு வருடத்திற்கு 1,750 MT சேரும்) அதை எங்கே கொட்டுவீர்கள்? > C & P
புதுசா குப்பைக்கொட்ட இடம் கிடைச்சா, அந்த புது இடத்தில ... கிடைக்கலேனா, இருக்கவே இருக்கு, நம்ம சேர்மன் கைக்குழந்தையா
இருக்கும்போதிலிருந்து கொட்டிட்டு இருக்காங்களே, அதாங்க, பல திறமை மிக்க தலைவர்களை கண்ட, அந்த எல்.எப். சாலை தனியார் இடத்தில
...
< இரண்டு திட்டங்களும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் போது, மக்கும்/ மக்காத குப்பையை எவ்வாறு பிரிப்பார்கள்? தற்சமயம் நம் மக்கள் ஒரு
வாளி வைத்து அதை கொட்டவே சோம்பல், அலட்சியம் படும்போது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று 2 வாளியில் குப்பையை பிரித்து
தருவார்களா? > C & P
ரொம்ப ஆழமா யோசிச்சிருக்கீங்க ... வெரி குட் ... காக்கா, மக்கும் குப்பையை கறிக்கடை, மார்கட், ஹோடேலில் இருந்து தான் மஜோரிட்டி
எதிர்பார்க்குராங்கா ... வீட்டில இருந்து இல்லை ... அதுக்குன்னு தனி லாரி, தனி ட்ரிப் போகும் ... சரியா .. மேலும் அதிக விபரங்களுக்கு
தொடர்பு கொள்ளவும் நகராட்சி நிர்வாகத்துறை, எழிலகம், சேப்பாக்கம், சென்னை, அண்ணா சமாதி எதிரில்...
< தற்போது நம் நகரில் சேரும் குப்பைகளை எங்கே கொட்டுகிறார்கள் என்று தெரியுமா? அந்த குப்பைகள் LF ரோட்டுக்கு பின்புறமுள்ள தனியாருக்கு
சொந்தமான குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள நிலத்தில்தான் ... குப்பை கொட்டும் இடத்தை சுற்றி எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறக்
கூடாது என்று மாசு கட்டுப்பாடு விதிகள் சொல்ல, அப்படி ஒரு சூழல் பற்றி தலைவிக்கு தெரியுமா? > C & P
கொஞ்சமாவது நியாயமா இருக்கவேண்டாமா உங்க கேள்வி ... ஓவரா அநியாயமா இருக்க கூடாது ... காகா ... கம்ப்யூட்டர் கொதிச்சுரும் ...
எல்.எப். சாலை பக்கத்தில, இந்த சேர்மன் வந்தப்பிறகு தான் குப்பையை கொட்ட ஆரம்பிச்சாங்களா ... அந்த கேள்வியை, யார் தலைமையில,
குப்பை கொட்ட ஆரம்பிக்கப்பட்டது, யார் தலைமையில slaughter house கட்டப்பட்டுசீனு, ஆராய்ஞ்சு, இந்த கேள்வியை கேட்கணும் ...
< மாவட்ட ஆட்சியரின் கருத்தை உங்கள் பிரசுரம் மூலம் திரித்து வெளியிட்டிருக்கிறீர்கள். > C & P
>> மயான நிலமாக இருந்தாலும், தற்போது அதன் ஒரு பகுதி மட்டுமே மயானமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
>> ஒவ்வொரு ஜாதிவாரியாக மயானம் அமைப்பதற்கு, இப்பகுதி முழுமையும் மயான பயன்பாட்டிற்காகவே பிற்காலத்திற்குத் தேவைப்படும் எனத்
தெரிவிக்கப்படும் மன்ற உறுப்பினரின் ஆட்சேபனை நிராகரிக்கப்படலாம்.
>> எனவே, திட்ட செயலாக்கத்திற்குத் தேவையான 25.00 சென்ட் நிலப்பரப்பு இப்பகுதியிலிருந்து தெரிவு செய்யப்படலாம்.
சர்வே 278 ட்ட பத்தி ஆட்சியர் இப்படி சொல்றார் ...
>> மேற்படி நிலமானது நகர்ப்புறத்திலிருந்து சுமார் 4.00 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
>> கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
இத மறைச்சிட்டு, நீங்க கடைசி இரண்டு வரியை மட்டும் ஹைலைட் பண்ணுறீங்க. நல்ல திறமை தான், பாராட்டி தான் ஆகணும் ... இந்த இடத்தை
பார்க்க வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், சென்னை அதிகாரியும் அங்க போனப்போது நீங்க இல்லாம போய்ட்டாங்க ... in case, உங்க
உறுப்பினர் நண்பர்கள் உங்கட்ட சொல்லாம போய்ட்டாங்கன, FYI, அந்த அதிகாரிகள் 278 பொருத்தம் இல்லேனே சொல்லிட்டாங்க ... நோ, நோ,
அவங்க எல்லாம் MEGA மெம்பெர்ஸ் இல்லை ... நம்புங்க
< கேட்கிறவன் கேனையனாக இருந்தால், கேப்பையில் நெய் வடியுது என்று சொல்லுவானாம்.
அப்போ நம் நகரில் இயங்கிவரும், சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பில் (KEPA) உள்ளவர்களிடம் அந்த ஆலையின் கழிவுகள் நம் கடலில் கலப்பதற்கு
ஆதாரம் இல்லையா? அதுவும் பீலா தானா? > C & P
ஆதாரம்ல இருக்கூங்க ... கடல்ல கலக்குராங்கனு ஆதராம்ல இருக்குங்க ... போன வாரம் புதிய தலைமுறை பார்த்தீங்களா ... ஓஹோ, இன்னும்
கவுன்சில் மீட்டிங் வீடியோ தான் பார்த்துட்டு இருக்கீங்களோ ... ஓகே ஓகே
முழுசா ஓடையை ஆய்வு செய்றதுக்கு முன்னே, குற்றம் இடத்தில, வேற கைரேகை பட்டுவிடக்கூடாதுன்னு சொல்றோம்க, அம்புட்டுதாங்க ... இத
புரிஞ்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தாங்க ... புரிய வேண்டியவங்க புரிசிக்குருவாங்க ... அதாங்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம்
< இந்த உறுப்பினர்களை மிரட்டும் வேலையை இத்தோடு நிறுத்துங்கள். > C & P
< அவர்கள் முன்னர்மாதிரி, நகர்மன்றத்தில் வெளிநடப்பு செய்ய மாட்டார்கள். நகரின் நன்மைக்காக நகர்மன்றத்தில் குரல்கொடுப்பார்கள். > C & P
இரண்டு வருஷம் கழிச்சாவது புத்தி வந்திருக்கே ... ரொம்ப சந்தோசங்க ... அது எப்படிங்க, நீங்க ஏதாவது செய்தீங்களா?
< சென்ற மாத கூட்டத்திலும், அதன் பின் நடந்த அவசர கூட்டத்திலும், உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? தலைவி அதற்கு எவ்வாறு
பதில் சொன்னார்கள் என்று, இணையதளங்களில் தணிக்கை செய்யாத வீடியோ காட்சிகள் மூலம் மக்கள் தெரிந்து கொண்டார்கள். தலைவின் நிர்வாக
திறமை(?) சாயம் கலைந்து போய்ட்டுதுங்கோ! > C & P
நாங்களும் பார்தொங்க ... யாருடா சாயம் கலைஞ்சுதுன்னு நாங்களும் பார்தொங்க ... நாடகம் நல்லா இருந்திச்சு ... என்னா, 16 நடிகர்கள்,
வசனம் எல்லாம் ஒன்னு, ரண்டு தான் பேசிச்சு ... கொஞ்சம் போர் தான் ... அடுத்த தடவ, வசனத்தை மத்தவங்களுக்கும் எழுதி கொடுக்க
சொல்லுங்க ... அப்புறம், முக்கியம், அந்த டிராமால இந்த சீன பார்த்தீங்களா ... அதாங்க அந்த பத்திரிக்கை விளம்பரம் கமிசன் மேட்டர் ... அது
என்னானா, பழக்க தோஷம், கேமரா ஓடிட்டிருக்குன்னு மறந்துட்டாங்கா ... தப்பா ஒன்னும் நினைச்சுக்காதீங்க ... மத்தப்படி ரொம்ப நல்லவங்கா
...
< மக்களும் உஷாராக இருக்காங்கோ. உங்களின் நாடகம் அம்பலமாக போகுதுங்கோ. > C & P
மீடியா உள்ள வந்தா நாங்க வரமாட்டோம் ... இந்த தலைவி கீழ் கூட்டம் நடந்த, நாங்க வரமாட்டோம்னு டயலாக் உட்டவங்க எல்லாம், துரத்னாலும்
போக மாட்டோம்னு, அமர்வு ஒன்னு, அமர்வு இரண்டு, அமர்வு மூணுன்னு உக்குருராங்கலே ... அப்பவே நினைச்சேன்,
மக்கள் ரொம்ப உசார், காக்கா, ரொம்ப உசார். இது மக்களாட்சி காலம் ... நாட்டமை எல்லாம், அவங்க அவங்க வீட்டோட தான் ... ராஜா, ராணி
கதையெல்லாம், பிள்ளைங்களுக்கு, பேரன்களுக்கு தான் ... மலரும் நினைவுகள் செக்சனுக்கு போய்டணும் ... இனி புது பாடல் தான் ... ஏமாந்த
காலம் எல்லாம், மலை ஏறிடுச்சு ... இன்ஷா அல்லாஹ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross