செய்தி: “கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” - உயிரி எரிவாயு திட்டத்திற்கான இடந்தேடல் குறித்து ‘மெகா’ வெளியிட்டுள்ள பொதுப்பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byHameed Rifai (Kayalpatnam)[27 October 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 31016
< MEGA’s intention may be right. But no one will accept a biogas plant and a solid waste dumpsite at his back yard. > C & P
< It did not require high technical knowledge to understand the health hazards around a solid waste dump. If someone got a
proper and sensible nose, he can feel the stench around the dumpsite. Guys who advocate the site near residential area should
try to shift their houses near these facilities or at least try to find a location for this facility at their back yard. >
C & P
சகோதர் அபு ரஸ்தா அவர்களுக்கு, குப்பைக்கொட்டும் இடத்தையும், பயோ காஸ் இடத்தையும் - ஒரே இடத்தில், அமைக்க MEGA ஆதரவு
தெரிவிக்கவில்லை. தயவு செய்து பிரசுரத்தை மீண்டும் படிக்கவும்.
மாறாக பயோ காஸ் திட்டம் இடம், ஊருக்கு மிகவும் ஒதுங்கியில்லாமல், அதில் உருவாகும் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டிய தெரு விளக்குகள்
அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகாமையில் இது அமைய வேண்டும் என்று வல்லுனர்கள் கூறுவதையே பிரசுரம் எடுத்து கூறியுள்ளது. இதற்கு
காரணம் விநியோக இழப்பை குறைப்பதற்கே.
அது போன்ற இடம் தான், சர்வே எண் 392/5. அந்த இடத்தை நேரில் பார்த்துள்ளதால் இதனை நான் கூறுகிறேன். அதற்கு அருகில் - நீண்ட
தூரத்திற்கு எந்த குடித்தனமும் இல்லை. ஆனால் சாலை வசதி உண்டு, மின் விளக்குகள் உண்டு. எனவே - அரசின் குறிக்கோளை (நகராட்சிக்கு
மின்சார செலவு சேமிப்பு), குறைந்த செலவில் நிறைவேற்ற இந்த இடம் சாத்தியமானது என்று மாவட்ட ஆட்சியரும், இதர அதிகாரிகளும்
கூறியுள்ளனர்.
அது மட்டும் அல்ல, மாற்று கருத்துக்கொண்ட உறுப்பினர்களும் - இந்த இடத்தை எதிர்க்க காரணம், அந்த நிலத்தின் ஓர் பகுதியில் மயானம்
அடக்கப்படுகிறது என்பது தான். இந்த இடம் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கிறது என்று அல்ல.
இந்த இடத்தை தவிர, இது போன்ற இடங்கள், பல புறம்போக்கு நிலங்கள் நகராட்சியில் உள்ளது.
< The first biogas plant of the Pune Municipal Corporation (PMC) commissioned in 2010 as a solid waste management measure is
making too much wrong noises. > C & P
எந்த புது திட்டங்களையும் மேற்கொள்ளும் போது, பாதுக்காப்பினை நாம் கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும்
இல்லை. ஆனால் - நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள, ஒரு செய்தியை மட்டும் கொண்டு, பயோ காஸ் திட்டம் கூடாது என்று முடிவெடுக்க தாங்கள்
வலியுறத்தவில்லை என நம்புகிறேன்.
விதிமுறைகளுக்கு உட்பட்டு, சரியான முறையில் பயோ காஸ் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆபத்துக்கள் அரிதாக்கப்படலாம் என்பதை தாங்கள்
ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அவ்வாறு சரியான இடத்தில், சரியான முறையில், இந்த திட்டம் அமைக்கப்பட்டு, முறையாக இயக்கப்பட்டால் எவரும் எதிர்க்கப்போவதில்லை.
தற்போது தமிழக அரசு ஒவ்வொரு நகராட்சியாக அறிமுகம் செய்துவரும் பயோ காஸ் திட்டத்திற்கு முன்னோடியாக - ஆற்காடு நகராட்சி
இத்திட்டத்தை 2011-12 லேயே மக்களின் நிதி பங்களிப்பு கொண்டு, தன்னிறைவு திட்டம் மூலம் - நிறைவேற்றியது.
அதனை முன்னோடியாக கொண்டே தமிழக அரசு - பிற நகராட்சிகளில் (இதுவரை 20) இத்திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது.
< DCW got clearance from TNPCB and other government bodies for their industry, still why you guys are behind that. Do you
think you are much smarter than them or you feel what TNPCB did is based on wrong judgment? > C & P
DCW பிரச்சனையோடு, இதனை இணைப்பது சரியாக தெரியவில்லை. மாசு கட்டுபாட்டு வாரியம் விதிகளை DCW தொழிற்சாலை பின்பற்றாததும்,
அதனை முறையாக கண்காணிக்காததும் தான் பிரச்சனையே தவிர - மாசு கட்டுபாட்டு வாரியத்தின் விதிமுறைகளில் பிரச்னை அல்ல.
தயவு செய்து மீண்டும் பிரசுரத்தை படிக்கவும்.
< சரி... முன்னாள் தலைவரின் நிலத்தில் இதை நிறுவினால் வரும் நட்டங்கள் என்ன? ஐந்து லட்சம் என சொல்ல வேண்டாம்.. cost is
recoverable in a year and there could perpetual gain. இந்த திட்டம் உபயோகம் இல்லாம் போயி விடுமா? > C & P
சகோதரர் ரில்வான் அவர்களுக்கு,
முன்னாள் தலைவரின் இடம் (278) பயோ காஸ் திட்டத்திற்கு பொருத்தமில்லை என்பதை தாங்கள் அந்த இடத்தை பார்த்தால் கூறலாம். இதனை
தான் - சென்னையில் இருந்து பார்த்த நகராட்சி நிர்வாகத்துறை SUPERINTENDING ENGINEER மற்றும் மாசு கட்டு பாட்டு வாரியத்தின் அதிகாரி ஆகியோர் கூறினர்.
தாங்கள் - இந்த இடத்தை GOOGLE MAP கொண்டு பாருங்கள். இடத்தின் தன்மை தெரியும். பல ஏக்கர் காலியான இடத்தின் வடக்கோடியில் இந்த
இடம் உள்ளது. இங்கிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்துவது சாத்தியம் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross