செய்தி: “கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” - உயிரி எரிவாயு திட்டத்திற்கான இடந்தேடல் குறித்து ‘மெகா’ வெளியிட்டுள்ள பொதுப்பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சர்வே எண் 278 பற்றிய மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[28 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31048
தம்பி அப்துல் காதிர், உங்களின் மாவட்ட ஆட்சியரின் கருத்துப் பற்றி,
இந்த இணையத்தளம், தன் கருத்தையோ, அவர் சொன்னார் இவர் சொன்னார் என்றோ போடவில்லை. மாறாக மாவட்ட ஆட்சியரின் குறிப்புகளை வரிக்கு வரி பதிந்துள்ளது. எப்படி சர்வே எண் 392/5, 334/1, 334/2, 334/12 & 334/15 -ளுக்கு பரிந்துரை செய்துள்ளாரோ, அதே போல் சர்வே எண் 278 பற்றிய பரிந்துரைகளை பார்போம்.
காயல்பட்டினம் தென்பாகம் வருவாய்க் கிராமத்தில், நில அளவை எண் 278இல் உள்ள தனிநபர் பட்டா நிலம் திடக்கழிவு மேலாண்மைக்காக இனாமாகப் பெற வாய்ப்புள்ளதாக நகராட்சி தலைவியால் கூறப்பட்டதால் தலம் பார்வையிடப்பட்டது.
>> மேற்படி நிலமானது நகர்ப்புறத்திலிருந்து சுமார் 4.00 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
>> கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
>> மேற்படி நிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவியல் பாதை உள்ளது.
>> மேற்படி நிலத்தில் திட்ட செயல்பாட்டிற்காக 25.00 அளவுள்ள நிலப்பரப்பு குறைந்த அளவு விலை நிர்ணயத்தொகை அடிப்படையில் வழங்க சம்மதிப்பதாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது.
>> மேற்படி 25.00 சென்ட் அளவுள்ள நிலத்தினை தானமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
>> மேற்படி நிலப்பரப்பு கடற்கரை பகுதியினை ஒட்டி அமைந்துள்ளதால் “கடற்கரை மேலாண்மைப் பகுதி” வரையறைக்குள் (CRZ) அமையப்பெறாவண்ணம் திட்ட செயல்பாட்டிற்கான நிலம் தெரிவு செய்யப்படலாம்.
(Action: நகராட்சி ஆணையாளர், காயல்பட்டினம்) .
>> மேற்கண்ட மூன்று இடங்களிலிருந்து காயல்பட்டினம் நகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள திடக்கழிவு மேலாண்மை, எரிவாயு உற்பத்தி செய்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்காக சுமார் 25.00 சென்ட் அளவுள்ள நிலப்பகுதி தெரிவு செய்து நகர்மன்றத் தீர்மானம் நிறைவேற்ற நகராட்சி ஆணையரால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
(Action: நகராட்சி ஆணையாளர், காயல்பட்டினம்) (C&P)
காய்தல் உவப்பு இன்றி, இந்த குறிப்புகளை மீண்டும் படிக்கவும். மாவட்ட ஆட்சியர், இந்த நிலத்தை நிராகரிக்கவில்லை, மாறாக திட்ட செயல்பாட்டிற்கான நிலம் தெரிவு செய்யப்படலாம் என்று பரிந்துரை செய்கிறார். அந்த நிலத்தில் அந்த plant வருவதற்கு தகுதியற்றதாக இருந்தால், தானமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பு அனுப்புவாரா? அவர் அந்த நிலத்தை ஆய்வு செய்தபின் இந்த குறிப்பை அனுப்புகிறார். அவருக்கும் தெரியும் 4 கி.மீ தூரத்தில் இருக்கிறது, கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது என்று. அதை குறிப்பிடவும் செய்கிறார்.
1 கி.மீ தூரம் மட்டுமே சாலை மற்றும் மின்சார வசதி செய்ய வேண்டும். உங்களின் வெறுப்பு, அந்த 1 கி.மீ -க்கும் நம் நகராட்சி நிதியில் இருந்து ஏன் செலவழிக்க வேண்டும்? நான் கேட்பது நமதூர் சாலைகள் அனைத்தும் நம் நகராட்சி நிதியில் இருந்தா போடப்பட்டது? எத்தனை சாலைகள். MLA / MP தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து போடப்பட்டிருக்கிறது? ஒரு திறமையான தலைவியாக இருந்தால், நம் MLA/MP ஆகியோரிடம் முறையிட்டு அதை பெறலாம். முறையிட்டால் தானே கிடைக்கும். இப்பொது ஆளும்கட்சியில், அதுவும் முதல்வர் முன்னிலையில் சேர்ந்து விட்டார். மாவட்ட மந்திரியின் ஆதரவு உள்ளது. அதை வைத்து இந்த 1 கி.மீ சாலையை போடமுடியாதா?
நம் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ள 3 இடங்களில் ஒன்றான இந்த சர்வே எண் 278-ஐ பரிந்துரைத்து, நமது நகர்மன்றத்தில், தலைவி மற்றும் 13-ம் வார்டு உறுப்பினர் நீங்கலாக ஏனைய 16 உறுப்பினர்களும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இந்த திட்டம் நமது நகரில் நிறைவேற்றப்படுமா அல்லது அந்த நிதி அரசுக்கு திருப்பி அனுப்பப்படுமா? என்பது தலைவின் கையில் உள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross