செய்தி: “கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” - உயிரி எரிவாயு திட்டத்திற்கான இடந்தேடல் குறித்து ‘மெகா’ வெளியிட்டுள்ள பொதுப்பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உங்கள் நிலம் விலையேற வேண்டுமா? குப்பை கொட்டும் இடம் அருகில் வாங்கவும் posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[28 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31050
MEGA -வின் அற்புதமான கண்டுபிடிப்பு.
மக்களே! உங்கள் நிலங்கள் பன்மடங்காக விலையேற்றம் பெற வேண்டுமா? குப்பை கொட்டும் இடத்திற்கு அருகில் வாங்கவும். Courtesy: MEGA, Kayalpatnam.
இது நாள் வரை, இந்த அமைப்பினரும், தலைவியின் ஆதரவாளர்களும் சொல்லும் முக்கிய காரணம், 'இச்செலவுகளால், யார் பயனடைய போகிறார்கள்? பொதுமக்களா அல்லது இப்பகுதியில் நிலம் வைத்துள்ள நிலமுதலாளிகளா? மக்கள் வரிப்பணத்தில் சாலைகள், மின்வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்து அங்குள்ள நிலங்களின் விலையை பன்மடங்கு உயர்த்துவது.... (C&P)
கொஞ்சம் நிதானித்து யோசியுங்கள். நம் வீடு / நிலங்களுக்கு, முன்பு அல்லது அருகில் ஒரு பெரிய வணிக வளாகம், ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையம், ஏதாவது அரசு அலுவலகம், பள்ளிக்கூடம், கல்லூரி, என்று மக்கள் அதிகம் கூடும் இடமாக இருந்தால் நிலத்தின் விலை கூடுமா?
அல்லது இதுபோன்று குப்பை கொட்டும் இடம், சாக்கடை, கூவம் ஆகியவற்றிற்கு அருகில் இருந்தால் நிலத்தின் மதிப்பு கூடுமா? சற்று யோசியுங்கள் மக்களே! நம் கட்டிடத்திற்கு முன்பு மக்கள் பயன்படுத்தும் மேம்பாலம் இருந்தாலே அந்த இடத்தின் மதிப்பு குறைவுதான் என்று சாமானியனும் சொல்லுவான். அப்படியிருக்க குப்பை கொட்டும் இடம் அங்கு வந்தால், அங்குள்ள நிலத்தின் மதிப்பு கூடுமாம். புத்தி உள்ளவர்கள் சிந்திப்பார்கள்.
1 கி.மீ தூரம் மட்டுமே சாலை மற்றும் மின்சார வசதி செய்ய வேண்டும். உங்களின் வெறுப்பு, அந்த 1 கி.மீ -க்கும் நம் நகராட்சி நிதியில் இருந்து ஏன் செலவழிக்க வேண்டும்? நான் கேட்பது நமதூர் சாலைகள் அனைத்தும் நம் நகராட்சி நிதியில் இருந்தா போடப்பட்டது? எத்தனை சாலைகள். MLA / MP தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து போடப்பட்டிருக்கிறது? ஒரு திறமையான தலைவியாக இருந்தால், நம் MLA/MP ஆகியோரிடம் முறையிட்டு அதை பெறலாம்.இப்பொது ஆளும்கட்சியில், அதுவும் முதல்வர் முன்னிலையில் சேர்ந்து விட்டார். மாவட்ட மந்திரியின் ஆதரவு உள்ளது. முறையிட்டால் தானே கிடைக்கும். அதை வைத்து இந்த 1 கி.மீ சாலையை போடமுடியாதா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross