செய்தி: “கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” - உயிரி எரிவாயு திட்டத்திற்கான இடந்தேடல் குறித்து ‘மெகா’ வெளியிட்டுள்ள பொதுப்பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாவட்ட ஆட்சியரின் மற்றும் அதிகாரிகளின் குறிப்பு. posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[29 October 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 31060
மயான புறம்போக்கு இடத்தை ஆய்வு செய்யும்போது உறுப்பினர் சாமி அவர்கள் அந்த இடம் குறித்து தனது ஆட்சேபணையைக் கூறியபோதெல்லாம், அவற்றுக்கு அங்கேயே பதிலளித்த ஆட்சியர், அந்த பதில்களையெல்லாம் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. மாறாக, அவரது பொறுப்பிற்கு உட்பட்டே வாசகங்களைக் குறிப்பிட்டுள்ளார். (C&P)
தம்பி ஹாமீத் ரிபாய் உடைய கருத்து. நீங்களும் நானும் எப்படியும் குறிப்பிடலாம். அதே போல், மாவட்ட ஆட்சியர் உட்பட எந்த அரசு அதிகாரியும் வாய்மொழியாக ஏதும் கூறலாம். ஆனால் அது ஆவணமாக ஆகாது. எதை குறிப்பாக எழுதுகிறார்களோ அதுதான் ஆவணமாகும் என்பது உங்களுக்கும் தெரியும். மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் உறுப்பினர் சாமி அவர்களின் ஆட்சேபனை நிராகிக்கப்படலாம் என்ற குறிப்பையும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் குறிப்பு கீழ் உள்ளது.
>> ஒவ்வொரு ஜாதிவாரியாக மயானம் அமைப்பதற்கு, இப்பகுதி முழுமையும் மயான பயன்பாட்டிற்காகவே பிற்காலத்திற்குத் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படும் மன்ற உறுப்பினரின் ஆட்சேபனை நிராகரிக்கப்படலாம். (C&P)
இதுபோன்ற விஷயங்களில் அவருக்கு சரியான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது இதர அதிகாரிகள்தான். அப்படி வந்த அதிகாரிகள்தான் இந்த இடம் தகுதியில்லை என வெளிப்படையாகவே கூறிச் சென்றுள்ளனர். அதன்படி அறிக்கையையும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்தால், இதில் வேறு பேச்சுக்கு இடமேயில்லை. (C&P)
தம்பி, உங்களுக்கு ஒன்று தெரியுமா? உச்ச நீதிமன்றத்திலும் கூட, open court- ல் நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள், தீர்ப்பாக ஆகாது. எது தீர்ப்பாக எழுதப்படுகிறதோ, அதுதான் இறுதி. உதாரணமாக, டான்சி வழக்கில், நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் என்ன? ஆனால், தீர்ப்பு என்ன? என்று உங்களுக்கு தெரியும்.
அதே போல்தான் நீங்கள் குறிப்பிடும் அந்த அதிகாரிகள் வெளிப்படையாக சொன்னெதெல்லாம். அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கட்டும். அளித்தால்...... அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அது வரை பொறுமையாக இருப்போம்.
இத்திட்டங்களை செயல்படுத்தத் தகுதியான புறம்போக்கு நிலங்களே நமதூருக்கு இல்லை என்று முடிவு வரட்டும். (C&P)
என்னுடைய கருத்தும் தகுதியான அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கும்போது வேறு நிலங்கள் தேட தேவையில்லை. ஆனால், 2 திட்டங்களும் ஒன்றாக இருப்பது தான் நமது ஊருக்கு, cost wise நன்மை தரும்.
தலைவி அவர்கள் சொல்லி தான், சர்வே எண் 278-ஐ மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தது, மேலும் 2 திட்டங்களுக்க்ம் சேர்த்துதான் அந்த இடத்தை பரிந்துரை செய்கிறார். மாவட்ட ஆட்சியர் உட்பட ஆய்வுக்கு வந்த எல்லா அதிகாரிகளும் , சர்வே எண் 278-ஐ தவிர மற்ற இடங்கள் bio-gas plant- க்கு மட்டுமே ஆய்வு செய்தனர்.
வாவு செய்யத் அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்கள், எனக்கு சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை. அவரின் இடத்தை பற்றி பரிந்துரை செய்ய. அவருக்கும் அதை விற்றுத்தான் பொழப்பை நடத்தனும் என்று அல்லாஹ் அவரை வைக்கவில்லை. அவர் நகரமன்ற தலைவராக இருந்தபோது, தன் கைக்காசை, இந்த நகர்மன்றத்திர்காக செலவழித்தார் என்று, உங்களுக்கு சாதகமான முன்னாள் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
இப்போதும் என் இடத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது தருகிறேன் என்று சொல்லவில்லை. மாறாக தலைவி அவர்கள் ஐக்கிய பேரவை உட்பட அனைத்து பொது பல அமைப்புகளுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், ஐக்கிய பேரவை கேட்டுக் கொண்டதன் பேரில் கொடுக்க முன் வருகிறார். அல்லாஹுக்கு பயந்து, உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். அந்த இடத்தில், 25 ஏக்கரில் வெறும் 5 ஏக்கர் நிலம் மட்டும், குப்பை கொட்ட இடம் அளித்தால், மீதி 20 ஏக்கரில் அவரால் என்ன அபிவிருத்தி பண்ண முடியும்? என்று சொல்லுங்கள்.
நான் கேட்ட நில விலையேற்றம் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் எதிர்பார்த்து இருக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross