Re:... posted byசாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்)[30 October 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 31081
உமர் அவர்களின் கூர்மையான அவதானிப்பிற்கு நன்றி.
அக்யூ பங்சர் மருத்துவ முறையில் வாழ்க்கை முறை மாற்றம் பற்றியும், மருத்துவ குணம் உள்ள நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயற்கையான உணவுகளை பற்றி மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.
இயற்கை உணவை செரிக்க இயலாத , அதன் சத்து சாரங்களை உறிஞ்ச இயலாத நோயாளிகளுக்கு துணை உணவை பரிந்துரைப்பதில் தவறில்லை என்றே நான் கருதுகின்றேன்.
ஆனால் துணை மருந்துகளின் விலையோ சாமானிய மக்கள் வாங்க இயலாத அளவிற்கு இருப்பது வேதனையானது.
இந்த உணர்வலைகள் தொடர்புடைய மருத்துவருக்கு தெரிவிக்கப்பட உள்ளது என்பதை உமர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
திறமையுள்ள மாற்று முறை மருத்துவர்கள் இந்த அறத்தைக் கடைபிடிக்கவில்லையென்றால் கொள்ளையடிக்கும் நவீன மருத்துவத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.
எந்த மருத்துவ முறையானாலும் பக்க விளைவுகள் அறவே அற்ற அல்லது மிக குறைந்த பக்க விளைவுகள் உடைய செலவில்லாத அல்லது மிகவும் செலவு குறைந்த எளிய மருத்துவமாகவே இருக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross