நமது நகரில் பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் (நமது உரிமை நிலங்கள்) கேள்விக்குறியாக உள்ளது... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[31 October 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 31096
அரசு திட்டத்திற்கு தனியார் நிலம் தருகிறார்...! தனியார் நிலம் தருகிறார்...! என்று நகர் மக்களை திசை திருப்பும் நாடகத்தை ஒரு குழுவாக இருந்து செயல்படும் நாடகம் என்று நான் கருதிகிறேன்... மக்களும் யோசிக்க வேண்டும்... ஏன்... என்று யோசிக்காத உண்மை நிலை அறிய முடியாது...!
"ஏன்....? என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை." ஆக கேள்வி கேட்பது நம் உரிமை மட்டுமல்ல. நம் கடமையும் கூட. நம் இந்த தேசத்தில் கேள்வி கேட்காமல் ஏதும் எளிதில் கிடைப்பதுமில்லை. சுலபமாக நடப்பதுமில்லை என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. அதற்கு காயல்பட்டினம் நகராட்சி மட்டும் என்ன விதி விலக்கா..?
காயல்பட்டினம் நகர நண்பர்கள் மற்றும் புறநகர் பகுதி நண்பர்கள் அனைவரும், நம் நகரின் எதிர்கால தேவை நலனைக் கருத்தில் கொண்டு, அரசு அலுவலகங்கள் அத்தனையிலும், நல்ல பல ஆக்கப்பூர்வமான கேள்விகளை தகவல் அறியும் உரிமைகள் சட்டத்தின் வாயிலாக கேட்டுப் பெற முன் வர வேண்டும். இவற்றை நாம் நீதிமன்றத்தில் ஆவணமாக பயன் படுத்திடவும் இயலும் எனபது கூடுதல் தகவல்.
நமது நகரில் பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் (நமது உரிமை நிலங்கள்) கேள்விக்குறியாக இன்று யார் யார் ஆக்கிரமப்பில் உள்ளதோ என்று அச்சம் பல பேருக்கு மனதில் வேரூண்டி விட்டது என்பது சந்தேகமில்லை.. இதை எப்படி மீட்பது, எப்படி அணுகவது என்று மக்கள் நாம் விழிப்புணர்வு பெற வேண்டும்...
காயல்பட்டினம் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மத்தியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக காயல்பட்டினத்தில் MEGA மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிக்காட்டி அமைப்பு சார்பாக முயற்சிகள் மேற்கொண்டு வருவதை நான் அறியும் போது நமக்குள் பெருமிதம் உணருகிறோம்... இந்த RTA சட்டம் குறித்த இலவச கையேடும் விரைவில் மக்கள் மத்தியில் வெளியிட MEGA முன் வர வேண்டும்...
நான் பதிந்து இருக்கும் என் கருத்தில் தவறு இருக்குமானால் சுட்டி காட்டுங்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross