நெஞ்சை உருகச் செய்து கண்ணீரை வரவழைத்த கட்டுரை.....!!! posted byS.K.Shameemul Islam (Chennai)[01 November 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 31132
மாஷா அல்லாஹ். நெஞ்சை உருகச் செய்து கண்ணீரை வரவழைத்த கட்டுரையை எங்களின் அன்பிற்கினிய சாச்சப்பா அவர்கள் வடித்துள்ளார்கள். ஜஸாகல்லாஹு ஃகைரன்.
ஆரம்பிக்கும் போதே முடிந்து விடும் தூரத்தில் கட்டுரை அமைந்து இன்னும் தொடரத என ஏங்க வைத்தாலும் ஒரு நீண்ட காலத்திற்கு இக்கட்டுரை நம் மனதில் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
எழுத்தின் ஓட்டமும் செய்தியும் மிக நன்றாக உள்ளதோடு கவிதையையும் அதனுள்ளே இலக்கியத்தையும் அதையும் கடந்து கருத்தையும் தருகிறது.
சாச்சப்பா. உங்களிடம் பல திறமைகள் உண்டு என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான்.
அதைக் கொணர இவ்வளவு தாமதம் ஆகிவிட்டதே என நினைக்கும் போது தான் இலேசான கவலை நம் உள்ளத்தில் மேலிடுகிறது.
நேற்று கூட உங்களின் நீண்ட நாள் நண்பரிடம் சொன்னேன். சாச்சப்பா இருக்குமிடத்தில் ஒரு ரசனை இருக்கும். கடந்த கால நினைவுகள் இருக்கும் என.
உங்களுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த நம்மவர்கள் பற்றி எங்களின் எதிர்காலத் தலைமுறையினருக்கு நாங்கள் நிறையச் சொல்ல வேண்டியுள்ளது. அவ்விரண்டு காலத்திற்கும் இடையில் ஒரு இணைப்புப் பாலமாக இருப்பவர்கள் நீங்கள்.
தயவு செய்து வெளிக் கொணருங்கள். நான் நம் குடும்பத்திற்காக மட்டும் கேட்கவில்லை. ஒட்டுமொத்த காயலர்களுக்காக கேட்கிறேன்.
ஏனெனில் காயலின் வரலாற்றுப் பெட்டகத்தில் உள்ள பொக்கிஷங்களின் திறவுகோல் உங்கள் கையில் நிச்சயம் உண்டென்பது எனக்கு எப்பவே தெரியும்.
தொடர்வீர்கள் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross