Re:... posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[04 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31206
"முன்னதாக, சென்னையிலிருந்து இன்று காலையில் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் வந்தடைந்த அவரை, காயல்பட்டினம் ரிஸ்வான் சங்கம், புதுப்பள்ளி ஜமாஅத்தினார் சார்பில் அதன் நிர்வாகிகள் சால்வை அளித்து வரவேற்றனர்" (C &P ).
இது அந்த சங்கம் மற்றும் ஜமாஅத்தினர், தாங்கள், தத்தமது நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பதாக கூறிய தகவல் என்றால், அது அந்த சங்கம் மற்றும் ஜமாஅத்தினர், அதை பற்றி முடிவு செய்து கொள்வார்கள். மாறாக, வரவேற்ற நபர்கள், அந்த சங்கம் / ஜமாஅத் சார்பில் அதிகாரபூர்வமாக வரவேற்காமல், தலைவியின், ஆதரவாளர்களாக, அபிமானிகளாக வரவேற்றால் செய்தியாளர், தவறான தகவல்களை தருகிறார் என்று அர்த்தம். இதற்கு வரவேற்றவர்கள் தான் பதில் கொடுக்க முடியும்.
தம்பி முத்து இஸ்மாயில், தேர்தல் நேரத்தில் அந்த ஜமாஅத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி, அந்த ஜமாஅத் உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் ஜமாஅத் கூட்டத்தில், கேட்டு தெளிவு பெற்று இருக்கலாம். அதே போல் தம்பி ஜஹாங்கிர் அவர்களும் இந்த அதிகாரபூர்வ வரவேற்பு பற்றி, ஜமாஅத் கூட்டத்தில் அல்லது அதன் தலைவர் / செயலாளர் அவர்களிடம் விளக்கம் கேட்டு தெளிவு பெறலாம். ஆனால் ஒரு தவறுக்கு இன்னொரு தவறு பரிகாரமாக முடியாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross