அதிமுகவின் 42ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்மையில் அக்கட்சியில் இணைந்த - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 42ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று (நவம்பர் 03) காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
கட்சியின் நகர செயலாளர் செய்யது காசிம் முன்னிலை வகிக்க, துணைச் செயலாளர் ஷேக் அப்துல் காதர் தலைமை தாங்கினார். அதிமுக நகர பேச்சாளரும், மூத்த உறுப்பினருமான ஹாஜி எஸ்.ஏ.முஹ்யித்தீன் என்ற மீசை மெய்தீன் வாழ்த்துரை வழங்கினார்.
தமிழக முதல்வரும் - அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதியன்று, நேரில் சந்தித்து, கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டதோடு, உறுப்பினர் அட்டையையும் நேரடியாகப் பெற்தையடுத்து, இன்று காலை அவர் சென்னையிலிருந்து ஊர் திரும்பியதையொட்டி, கட்சியின் நகர கிளை சார்பில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நகர்மன்றத் தலைவருக்கு, அதிமுக நகர செயலாளர் செய்யது காசிம் சால்வை அளித்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் சால்வை அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அதிமுக கட்சிக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக நகர இணைச் செயலாளர் அருணாச்சலக் கனி, பொருளாளர் ஜின்னா, ஆதி நாராயணன், செந்தமிழ்ச் செல்வன், காசிலிங்கம், அருணாச்சலக் கனி, எஸ்.எம்.நிஜார், பத்ருத்தீன், நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உள்ளிட்ட கட்சியின் நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். புரட்சி சங்கர் நன்றி கூறினார்.
முன்னதாக, சென்னையிலிருந்து இன்று காலையில் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் வந்தடைந்த அவரை, காயல்பட்டினம் ரிஸ்வான் சங்கம், புதுப்பள்ளி ஜமாஅத்தினார் சார்பில் அதன் நிர்வாகிகள் சால்வை அளித்து வரவேற்றனர்.
களத்தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
படங்களில் உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
மற்றும்
M.T.ஹபீப்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 5:45 pm / 3.11.2013] |