பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில், “ஆரோக்கியமான மக்கள்; வலிமையான தேசம்” எனும் தலைப்பில், தொடர் பரப்புரை - இம்மாதம் 01ஆம் தேதி முதல் 15 தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கான விழிப்புணர்வையூட்டும் முகமாக, அவ்வமைப்பின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சிறப்பு துவக்க நிகழ்ச்சி, மினி மாரத்தான் - குறுநீள் தொடர் ஓட்டமும், யோகா செய்முறைப் பயிற்சியும், இம்மாதம் 03ஆம் தேதியன்று காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
மாரத்தான் குறுநீள் தொடர் ஓட்டம் - நேற்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் மகாத்மா காந்தி நுழைவாயிலில் துவங்கி, கடற்கரையில் நிறைவுற்றது.
கடற்கரையில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சிக்கு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பிரமுகர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, எம்.எல்.செய்யித் இப்றாஹீம் (எஸ்.கே.) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட - டேக்வாண்டோ தற்காப்புக் கலை நிபுணர் வழக்குரைஞர் அஹ்மத் அப்துல் காதிர் - மனித உடல் நலனுக்கு அவசியமெனக் கருதப்படும் யோகாசனம் குறித்து, தன் குழுவினருடனான செய்முறைப் பயிற்சி மூலம் பொதுமக்களுக்கு விளக்கினார்.
அடுத்து, யோகா உடற்பயிற்சிக் கையேட்டு வெளியிடப்பட்டது. அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஷம்சுத்தீன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், கடற்கரையில் குழுமியிருந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
|