ஹஜ் பெருநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் வாழ் காயலர்கள் சிலர், மலேஷிய நாட்டிலுள்ள காயலர்களுடன், அந்நாட்டின் மலாகா என்ற சுற்றுலா நகருக்கு, இம்மாதம் 3, 4 தேதிகளில் இரண்டு நாட்கள் சுற்றுலா சென்றனர்.
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையெல்லாம் பார்வையிட்டு மகிழ்ந்த சுற்றுலாக் குழுவினர், அவ்விடங்களில் பல்சுவை உணவுப் பதார்த்தங்களை இணைந்துண்டு இன்புற்றனர்.
மலாக்காவில் பணிபுரியும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பாளையம் இஸ்மாஈல், பனைக்குளத்தைச் சேர்ந்த – சுற்றுலாக் குழுவினரின் நண்பர் ஹமீத் ராஜா ஆகியோர் அவர்களை வரவேற்று உபசரித்தனர்.
தகவல்:
குடாக் புஹாரி
கோலாலம்பூர் - மலேசியா |