பலமுறை முறையிட்டும் நீண்ட காலமாக தெரு விளக்குகள் எரியாததாகக் கூறி, காயல்பட்டினம் நகராட்சியைக் கண்டித்து, இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், இன்று மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. காவல்துறை முன்னனுமதி பெறாததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்குள்ள மின் கம்பத்தில் ஹரிக்கேன் விளக்கு ஏற்றப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் - இன்று மாலை 04.30 மணியளவில் நிகழ்விடம் வந்திருந்தார். ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், தான் சார்ந்த 16ஆவது வார்டுக்குட்பட்ட தைக்கா தெரு மற்றும் மருத்துவர் தெருவிலுள்ள மின் கம்பங்களில் திடீரென ஹரிக்கேன் விளக்கு ஏற்றினார். சில நிமிடங்களில் அவ்விளக்குகள் அகற்றப்பட்டிருந்தது.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
மற்றும்
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 09:01 / 05.11.2013] |