நவம்பர் 06ஆம் தேதி புதன்கிழமையன்று முஹர்ரம் மாத முதல் நாள் என, தூத்துக்குடி மாவட்ட காழீயும் (காஜி), காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்)
தூத்துக்குடி மாவட்ட இஸ்லாமிய பெருங்குடி மக்களுக்கு அறியத் தருவது:
05.11.2013 செவ்வாய் பின்னேரம் புதன் இரவு 1435 முஹர்ரம் பிறை ஒன்று என்றும், 13, 14.11.2013 புதன் பின்னேரமும், வியாழன் பின்னேரமும் தாசூஆ, ஆஷூறா இரவுகள் (அதாவது முஹர்ரம் மாதம் ஒன்பது, பத்து இரவுகள்) என்றும் தமிழக அரசு தலைமை காஜீ அறிவித்திருக்கிறார்.
எனவே, 14, 15.11.2013 வியாழன், வெள்ளி ஆகிய தினங்கள் முஹர்ரம் பிறை ஒன்பதாம் நாள், பத்தாம் நாள் என்று அறிவிக்கப்படுகிறது.
அல்லாஹ் இந்த புத்தாண்டின் பரக்கத்தினால் இஸ்லாமிய மக்களுக்கும், சகோதர சமுதாய மக்களுக்கும் மத்தியில் மதநல்லிணக்கத்தை உண்டாக்கி, பாரத நாட்டில் ஒற்றுமையுடனும், உவகையுடனும் வாழ அனைவருக்கும் வழிவகுப்பானாக, ஆமீன்.
இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |