தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதி மேலாண்மை திட்ட (COASTAL ZONE MANAGEMENT PLAN) வரை படத்திற்கான பொது மக்கள் கருத்து கேட்புரை கூட்டம் (PUBLIC HEARING) டிசம்பர் 10, 2013 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கடற்கரை கட்டுப்பாடு பகுதி (COASTAL REGULATION ZONE - CRZ) விதிமுறைகள் 2011 ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, உயரலைக்கோட்டுடன் 1:25000 விகிதாசாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை பகுதியின் மேலாண்மை திட்ட வரைப்படங்கள் (எண் 25,26,27 மற்றும் 28), கடற்கரை கட்டுப்பாட்டு பகுதி 1 (கூர்நுட்பமான பகுதி), கடற்கரை கட்டுப்பாட்டு பகுதி 2 (போதுமான வளர்ச்சி அடைந்த பகுதி), கடற்கரை கட்டுப்பாட்டு பகுதி 3 (வளர்ச்சியடையாத பகுதி) இடங்களில் அடங்கியுள்ள புல எண்களுடன், கூடிய விபரங்கள் - காயல்பட்டினம் நகராட்சி உட்பட, தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து உள்ளாட்சி மன்றங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகம் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், நவம்பர் 4 - தினத்தந்தி நாளிதழ் விளம்பரம் மூலம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளிவந்த 30 நாட்களுக்குள், இவ்விசயம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கள், மதிப்புரைகள், மறுப்புரைகள் வரவேற்க்கப்படுகின்றன.
நவம்பர் 4, 2013 தினத்தந்தி விளம்பரம்
நவம்பர் 5, 2013 தினத்தந்தி விளம்பரம்
இத்திட்டம் அமையவுள்ள இடம், இத்திட்டத்தால் பெரும்பாலும் பாதிக்கப்படுகிற இடங்களில் வாழும் சான்றளிக்கப்பட்ட குடிமக்கள், சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் பிறர் உள்ளடங்கலாக அனைவரும் பொதுமக்கள் கருத்து கேட்புரை கூட்டத்தில் பங்கேற்று, இத்திட்டத்தினை பற்றி அவர்களுடைய கருத்துக்களை - வாய்மொழியாகவோ, எழுத்து வடிவிலோ, --
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்,
C7&C9, சிப்காட் தொழிற்சாலைகள் வளாகம்,
மீளவிட்டான், தூத்துக்குடி
என்ற முகவரியில் அளிக்கலாம்.
தகவல்:
எஸ்.அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு. |