நவம்பர் 4 (திங்கள்) அன்று ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இலங்கை (புத்தலம்), குவைத், மொரோக்கோ, தென் ஆப்ரிகா, ஜிம்பாப்வே,
அமெரிக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் முஹர்ரம் 1435 பிறை காணப்பட்டதாக moonsighting.com இணையதளம் தெரிவிக்கிறது.
Islamic Crescents' Observation Project அமைப்பு உலகின் பல பகுதிகளில்
பிறை தென்பட்ட காட்சியினை வெளியிட்டுள்ளது.
ஈரான்
:: டாக்டர் அலிரஜா மேஹ்ராணி (இஸ்பஹான் நகரம், இஸ்பஹான் மாநிலம்) எடுத்த புகைப்படம்
:: முஹம்மது ஜாஹத் அறம் (சரவன் நகரம், பலூசிஸ்தான் மாநிலம்) எடுத்த புகைப்படம்
மொரோக்கோ
:: டாக்டர் ஹசன் தலிபி எடுத்த புகைப்படம்
அமெரிக்கா
:: டாக்டர் ஜாவேத் டோராபிநேஜாத் (பிலாக்ஸ்புர்க் நகரம், விர்ஜீனியா மாநிலம்) எடுத்த புகைப்படம்
சவுதி அரசாங்கம் - மார்க்கம் சம்பந்தமில்லாத பிற விசயங்களுக்கு பயன்படுத்தும் உம்முல் குர்ரா காலண்டர் படி - நவம்பர் 4, முஹர்ரம் 1 ஆகும். இருப்பினும் நவம்பர் 3 ஞாயிறு அன்று பிறை தென்படாததால், நவம்பர் 4 அன்று துல்ஹஜ் 30 பூர்த்தி செய்து, நவம்பர் 5 செவ்வாய் அன்று முஹர்ரம் 1, 1435 துவங்குகிறது - என சவுதி அரசாங்கத்தின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. |