ஆறுமுகநேரி காவல் நிலைய சரகத்தில் காயல்பட்டினம் நகராட்சி, ஆறுமுகநேரி பேரூராட்சி, மூலக்கரை ஊராட்சி ஆகிய பகுதிகள் உள்ளடங்கும்.
ஆறுமுகநேரி காவல் நிலைய புதிய ஆய்வாளராக கோ.பாலமுருகன் இம்மாதம் 05ஆம் தேதியன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு இவர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஆவண காப்பகத்தில் பணிபுரிந்து வந்தார்.
இதுநாள் வரையில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய டி.பார்த்திபன், ஏரல் காவல் நிலையத்திற்கு மாறுதல் ஆகியுள்ளார். இவர் ஆறுமுகநேரில் இரண்டு முறை ஆய்வாளராகப் பணிபுரிந்துள்ளார் என்பதும், ஆய்வாளர் பாலமுருகன் ஆறுமுகநேரியில் இரண்டாவது முறையாகப் பணியாற்ற வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
ஆறுமுகநேரியில் பொறுப்பேற்றதும் ஆய்வாளர் பாலமுருகன் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
பொதுமக்களைப் பாதிக்கக் கூடிய ரவுடியிசம், நில மோசடி, தீவிரவாத செயல்கள், ஈவ் டீசிங் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றால், தயங்காமல் அவற்றை பற்றி யார் வேண்டுமானாலும் என்னிடம் தகவல் தெரிவிக்கலாம். எனது கைபேசி எண் 89034 22555.
ஆறுமுகநேரி காவல்நிலைய சரகப் பகுதியின் மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் தேவையான அமைதித் தன்மை உறுதிப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தகவல்:
ச.பார்த்திபன்
செய்தியாளர் |