துளிர் அறக்கட்டளையால் நடத்தப்படும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோருக்காக, இம்மாதம் 04ஆம் தேதியன்று, மனநலம் - ஊக்கம் - பணித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
அப்பள்ளியின் பெற்றோர் மன்றத் தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பி தலைமையிலும், பெற்றோரான ராமச்சந்திரன், சாந்தி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சி - கிராஅத், தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.
துளிர் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை அனைவரையும் வரவேற்றார். பள்ளி நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் அறிமுகவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மனவள ஆலோசகர் ஜாஹிர் ஹுஸைன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பெற்றோருக்குத் தேவையான பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கியதுடன், துளிர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு - அவர்களது பணித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சியையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துளிர் பள்ளியின் ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர் உட்பட சுமார் 70 பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில், பயிற்சியாளருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
துளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. |