உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு - காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) சார்பில், இம்மாதம் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை - சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாமும், 17ஆம் தேதியன்று, அந்நோய் தொடர்பான தொலைக்காட்சி கேள்வி-பதில் நேரலை நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது.
13 முதல் 16ஆம் தேதி வரை - நாளொன்றுக்கு 125 பேர் வீதம் முன்பதிவு செய்து முதலில் வரும் 500 பேருக்கு, ரூபாய் 40 மதிப்புள்ள சர்க்கரை நோய் பரிசோதனை, கூலக்கடை பஜார் அல்லது கே.டி.எம். தெருவிலுள்ள Test Now Diagnostics ஆய்வகத்தில் - காயல்பட்டினம் நல அறக்கட்டளை சார்பில் இலவசமாக செய்யப்படும் என்றும், 17ஆம் தேதியன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, காயல்பட்டினம் ஐ.ஐ.எம். டிவியில் - சர்க்கரை நோய் தொடர்பான பொதுமக்களின் கேள்விகளுக்கு, தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவர் அருள் பிரகாஷ் விளக்கமளிக்கவுள்ளதாகவும், சர்க்கரை நோய் இலவச பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய விரும்புவோர்,
9150 22 62 52,
9150 22 32 42
ஆகிய எண்களுள் ஒன்றைத் தொடர்புகொள்ளுமாறும் அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
[செய்தி திருத்தப்பட்டது @ 13:53 / 09.11.2013] |