அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட மகளிரணி கலந்தாலோசனைக் கூட்டம், இம்மாதம் 09ஆம் தேதி சனிக்கிழமையன்று மாலை 06.00 மணியளவில், தூத்துக்குடி அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அதிமுக மாநில மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான எல்.சசிகலா புஷ்பா தலைமை தாங்கினார். கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சிறப்புரையாற்றினார்.
அண்மையில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவை சென்னையில் நேரில் சந்தித்து, தன்னை அக்கட்சியில் இணைந்தார்.
அதற்காக இக்கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், மேயர் சசிகலா புஷ்பா ஆகியோர் அவருக்கு சால்வையளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், ஐ.ஆபிதா ஷேக் உரையாற்றினார். தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அரசு மகளிருக்கு வழங்கியுள்ள உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அவர் பேசினார்.
அதிமுக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், காயல்பட்டினம் நகர்மன்ற 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், மாவட்ட மகளிரணி உறுப்பினர்கள் உட்பட பலர் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |