காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றம் சார்பில் 9ஆம் மாத கலந்துரையாடல் இம்மாதம் 09ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
நவம்பர் 9இல் ரிஸ்வான் சங்கம் (அரசு நூலகம் அருகில்) சனிக்கிழமை மாலை 05:15 மணி அளவில் கலந்துரையாடல் இறையருளால் நடைபெற்றது.
மாதந்தோறும் நடைபெறும் கலந்துரையாடல் அறிந்து இம்மாதம் ஜாவியா அரபிக் கல்லூரி பௌசுள் அமீன் ஆலிம் அவர்களும் சொளுக்கார் தெரு AA தாபித் அவர்களும்,குத்துக்கல் தெரு M.A.C.உமர் அவர்களும் புதிய விருந்தினராக கலந்துகொண்டனர்.
முதலில் அமைப்பாளர் ALS இப்னு அப்பாஸ் இலக்கியப் பிரியர்களை வரவேற்றுப்பேசிய பின் முதல் பேச்சாளராக நைனார் தெரு LT இப்ராஹீம் அவர்கள் சில நகைச்சுவைகளை எடுத்து வைத்தார். மேலும் இரண்டு செய்திகளை பதிவு செய்தார்கள்.
1. ஒரு சமயம் அண்ணாதுரை அவர்கள் பாரதப்பிரதமர் நேருஜி அவர்களிடம் இந்தியை ஏன் இந்தியாவின் தேசிய மொழி ஆக்கினீர்கள் என்று கேட்ட போது பிரதமர் நேருஜி அவர்கள் சொன்னார்களாம் இந்தியாவில் அதிகமான பேர் இந்தி பேசுகிறார்கள் அதனால் இந்தி தேசிய மொழி ஆக்கப்பட்டது என்ற போது அண்ணாதுரை அவர்கள் அப்படியானால் இந்தியாவில் அதிகம் வாழும் பறவை காகம் உள்ளதே,அதை தேசிய பறவையாக ஆக்கி இருக்கலாமே என்றாராம் நகைச்சுயையோடு.
2. கொசு உள்ளே வர முடியாமல் கொசு வலை போடுகிறோம்,கொசு எப்படியாவது கொசுவலைக்குள் போக முயற்சி செய்கிறது,இது போல் கடலில் மீன் வலையில் மாட்டிக்கொண்ட மீன் வலையில் இருந்து வெளியே வர முயற்சி செய்கிறது.இடத்துக்கு தகுந்தார் போல் சிந்தனை மாறு படுகிறது என்றார்.
அடுத்து வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு VM பாலமுருகன் பல்வேறு தகவல்களை கூறிய பின் இந்தியாவில் 27 தாது பொருள்கள் கிடைக்கும் ஒரே மாநிலம் எது? என்று கேட்டார்.பதிலை LT இப்ராஹீம் மத்திய பிரதேசம் என்று சரியாக சொன்னார்.அடுத்து கேள்வியை எழுப்பினார் அவர்,சட்டிஸ்கர் என்றால் என்ன என்று கேட்ட போது அவையில் யாரும் பதில் சொல்ல வில்லை,சட்டிஸ்கர் என்றால் 36 கோட்டைகள் கொண்ட மாநிலம் என்று அவரே பதில் தந்தார்.அடுத்து அருணாச்சலபுரம் க.வில்சன் அவர்கள் பேசும் போது இந்த சபையில் பேசுவதால் சபை கூச்சம் ஓரளவு மறைகிறது,சந்தோசமாகவும் இருக்கிறது.நல்ல உரையாடல்கள் இங்கே கிடைக்கிறது என்று கூறி "மங்கல்யான்" பற்றி நீண்ட விளக்கம் தந்தார்கள்.
அடுத்து அமைப்பாளர் ALS பேசும் போது நகைச்சுவை ஒன்றை சொல்லி விட்டு பெர்னாட்ஷா கூறிய தத்துவம் ஒன்றை பகிர்ந்தார்.திருமணம் என்பது ஒரு கோட்டை,கோட்டையின் உள்ளே திருமணம் ஆன பலர் இருக்கிறார்கள்,கோட்டைக்கு வெளியே திருமணம் ஆகாத வாலிபர்கள் இருந்து கொண்டு அந்த கோட்டை கதவை உடைத்து உள்ளே போக முயற்சிக்கிறார்கள்,திருமணம் ஆனவர்கள் வெளியே கதவை உடைத்துக்கொண்டு வர முயற்ச்சிக்கிறார்கள்,இப்படித்தான் உலகம் இருக்கிறதென்று தத்துவஞானி பெர்னாட்ஷா கூறினார் என்று பதிவு செய்தார்கள்.
அதற்குள் பாங்கு சொன்னதால் மேலும் பலர் பேச முடியாமல் சபை இனிதே நிறைவு பெற்றது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
V.M. பாலமுருகன்,
தேசபிதா மகன் சேவா சங்க அமைப்பாளர்,
காயல்பட்டினம் |