ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை, இம்மாதம் 22ஆம் தேதியன்று நடத்திட, அதன் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள காயலர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ் அருளால் துபை காயல் நல மன்றத்தின் நவம்பர் 2013 மாத செயற்குழு கூட்டம் மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் புஹாரி அவர்கள் வில்லாவில் வைத்து நவம்பர் 08ஆம் தேதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் நடைபெற்றது.
விளக்கு ஷெய்க் தாவூத் ஹாஜி அவர்கள் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகியது. துவக்கமாக முத்து முஹம்மத் இறைமறை வசனங்கள் ஓதினார். இக்கூட்டம் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற பொதுக்குழு கூட்ட ஏற்ப்பாடுகள் பற்றி மட்டும் கலந்தாலோசிக்க கூட்டப்பட்டதால், வேறு எந்த விஷயங்களும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இன்ஷா அல்லாஹ் துபை காயல் நல மன்றத்தின் 2013 ஆம் ஆண்டின் பொதுக்குழு நவம்பர் மாதம் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை துபை சத்வா-வில் அமைந்துள்ள அல்-ஸஃபா பூங்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பொதுக்குழுக் கூட்ட ஏற்ப்பாடுகள் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. வழமை போல் பொதுக்குழு கூட்ட நிகழ்விற்குப்பின் இளம் சிறார்கள் கேளிக்கை விளையாட்டு நிகழ்சிகளும் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமீரகத்தில் வாழும் அனைத்து காயலர்களும் இந்தப் பதிவையே அழைப்பிதழாக ஏற்றுக்கொண்டு, தங்களின் குடும்ப சகிதம் கூட்ட இடத்திற்கு முற்கூட்டியே வருகை தந்து சிறப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேரா துபை - அஸ்கான் D ப்ளாக் இருந்து வாகன வசதிகளும் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளன. வாகன வசதிகள் தேவைப்படுவோர் முத்து முஹம்மத் அவர்களை, 050-8104842 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உறுப்பினர்கள் பொதுக்குழுவிற்கு முற்கூட்டியே வருகை தரும் பொருட்டும் கூட்டத்தை கடைசி வரை இருந்து சிறப்பிக்கும் பொருட்டும், இரண்டு தங்க நாணய பரிசு குலுக்கல்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, பொதுக்குழுக் கூட்டம் குறித்து இச்செயறக்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேநீர் விருந்திற்குப் பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது - அல்ஹம்துலில்லாஹ். இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, துபை காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
யஹ்யா முஹ்யித்தீன்
செயலாளர் |