இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி நடந்த தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் 12வது ஆண்டின் துவக்கம் மற்றும் வருடாந்திர
பொதுக்குழுக் கூட்டத்தில் காயல்பட்டினத்தில் வாகன விபத்துகளைத் தவிர்க்க குவி விழி கண்ணாடி நிறுவுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 3 - வாகன விபத்துகளைத் தவிர்க்க குவி விழி கண்ணாடி:
பெரிய வாகனங்கள் அதிகம் செல்லும் காயல்பட்டினம் பிரதான வீதியின் திருப்பங்களில் விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, அந்தந்த வார்டு
உறுப்பினர்கள் மூலம் நகராட்சியின் அனுமதி பெற்று, தேவையான குவிவிழிக் கண்ணாடி (Convex Mirror) அமைத்துக் கொடுக்க இக்கூட்டம்
தீர்மானிக்கிறது. (பிப்ரவரி 17, 2013)
அதன் தொடர்ச்சியாக - ICICI வங்கி சந்திப்பில் - இன்று (நவம்பர் 12) காலை 10:30 மணியளவில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், குவிவிழிக்
கண்ணாடி (Convex Mirror) தக்வா அணுசரனையில் நிறுவப்பட்டது. இக்கண்ணாடியை நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது நகராட்சி ஆணையர் ஜி.அசோக் குமார், நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம். மொஹிதீன், 5வது வார்டு உறுப்பினர்
எம்.ஜஹாங்கிர், 13வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம். சம்சுதீன், 16வது வார்டு உறுப்பினர் சாமு, தக்வா உதவி செயலாளர் M.H. அபுல் மாலி,
அதன் செயற்குழு உறுப்பினர் M.A.C. செய்யது இபுறாஹீம், பொதுக்குழு உறுப்பினர் ஹாஃபிழ் S.M. மிஸ்கீன் சாஹிப் மற்றும் பொதுமக்கள் பலர்
கலந்து கொண்டனர். தக்வா சார்பாக அனைவருக்கும் இனிப்பு வழக்கப்பட்டது.
நெடுஞ்சாலை அதிகாரிகளின் ஒப்புதலுக்காக சோதனை முறையில் முதல் கண்ணாடி நிறுவப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை அதிகாரிகளின் ஆய்வுகளுக்கு பின் நகரின் பிற முக்கிய சந்திப்புகளில் இக்கண்ணாடி நிறுவப்படும் என தெரிகிறது.
புகைப்படங்கள் மற்றும் தகவல்:
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர், காயல்பட்டணம்.காம். |