துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு முழு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. இது குறித்து, அப்பள்ளி
சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவிகள் 45 பேர் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மனவளர்ச்சி
குறை, மூளை முடக்குவாதம், புற உலக சிந்தனையற்றிருக்கும் குழந்தைகளின் நிலை, அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் பற்றி அறிந்து
கொள்ள 11.11.2013 அன்று துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு, அக்கல்லூயின் பேராசிரியை சுசித்ரா தலைமையில், வருகை தந்தனர்.
துளிரின் இயன் முறை மருத்துவர் ரேவதி தலைமையில் துளிரின் கானொலி கூடத்தில் செவிலியர் மாணவிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
சிறப்பாசிரியை ஹலிமா இறைமறையின் வசனங்களை ஓதிட, துளிர் குழந்தைகளின இறைவணக்கப்பாடல, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி
துவங்கியது.
துளிர் சிறப்பாசிரியர் ஜெயா அனைவறையும் வரவேற்றார். துளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஜான் அறிமுக உரையாற்றினார்.
காயல்பட்டணம் குடும்ப நல மருத்துவர் ஜாபர் சாதிப் பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசினார்.
ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேள் வழியில் செவிலியர் கல்வியை தேர்ந்தெடுத்த மாணவிகள் அர்பணிப்புடன் நோயாளிகளுக்கு பணியாற்ற தயாராக இருக்க
வேண்டும் என்றும், மேலும் செவிலியர் கல்வியை ஏட்டளவில் மட்டும் கற்காமல், அனுபவம் பெறுவதற்கு நிறைய நேரடி பயிற்சிகளில் கலந்து
கொண்டு தங்களை ஒரு திறனுள்ள செவிலியர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
துளிர் இயன் முறை மருத்துவர் ரேவதி இயலா நிலை குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு வழங்கப்படும் பல்வேறு பயிற்சிகளை விளக்கி
கூறினார்.
துளிர் நிறுவனர் வழக்கறிஞர் அஹமது மனவளர்ச்சிக்குறை, மூளை முடக்குவாதம், ஆட்டிசம் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்,
இப்பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியும் முறைகள், இப்பிரச்சனைகளால் பாதிப்படைந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய பயிற்சிகள், உடல்
இயக்கச்சிகிச்சைகள் உள்ளிட்ட கருத்துக்களை கானொலி மூலம் தெளிவாக விளக்கி காட்டினார்.
அறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்களின் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் அவர்களின் சமூகபிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு குறும்படங்களும்
திரையிடப்பட்டன.
இதன் பின்னர் செவிலியர் மாணவிகள் துளிரின் பயிற்ச்சிமுறைகள், இயக்கமுறை சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு துளிரில இயலா
நிலைக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறைகளை நேரடியாக குழந்தைகளை பார்த்தும், சிறப்பாசிரியர்களிடம் கேட்டும்
தெரிந்துக்கொண்டனர்.
செவிலியர் மாணவிகளுக்கு துளிர் குழந்தைகள் நடனம, இசை, ஒவியம் உள்ளிட்ட தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்வித்தனர்.
இறுதியாக நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் செவிலியர் கல்லூரி பேராசிரியர் சுசித்ரா பேசும் போது, துளிரின் செயல்பாடுகள் தங்களை
நெகிழச்செய்ததாகவும் இந்த நாளில் மனவளர்ச்சி குறை பற்றி பல விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும் கூறியதோடு இந்த பயிற்சி கொடுத்து
வாய்ப்பளித்த துளிருக்கு நன்றி கூறினார். நாட்டுப்பண்ணுடன் மூலம் நிறைவுப்பெற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @11:00 pm / 13.11.2013] |