காயல்பட்டினத்தின் பல பகுதிகளில் குடிநீர் குழாய்கள் பழுதடைந்து, நீர் கசிவுகள் தெருக்களில் காணப்படுகிறது.
18 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே, மேற்கு நோக்கி செல்லும் சாலையிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் கசிந்து வீணாவது குறித்து - காயல்பட்டணம்.காம் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
இன்று காலை இக்கசிவினை சரி செய்யும் பொருட்டு, பணிகள் துவங்கின. சமீபத்தில் வெட்டி அகற்றப்பட்ட வேப்பமரத்தின் வேர்கள் ஊடுருவி குழாய்மீது அழுத்தம் கொடுத்த்தால் இந்த உடைப்பு ஏற்பட்டதாகவும், அதனை அகற்றி உடைந்த பகுதியை சரி செய்து வருவதாகவும் நகராட்சி குழாய் பொருத்துனர் நிஸார் தெரிவித்தார்.
புகைப்படங்கள் மற்றும் தகவல்:
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர், காயல்பட்டணம்.காம். |