காயல்பட்டினத்தில் நேற்று (நவம்பர் 12) இரவு 8 மணி அளவில் மழை பெய்ய துவங்கியது. ஒரு சில நிமிடங்களில் இடியும், மின்னலுமாக பெய்த மழை, இரவு முழவதும் சிறு மழையாக தொடர்ந்து, அதிகாலையில் வலுவான மழையாக பெய்தது. மதியம் 12 மணி அளவில் மழை நின்றது. இதமான வானிலை தற்போது நகரில் நிலவுகிறது.
நவம்பர் 13 - காயல்பட்டினம் மழைக் காட்சிகள் ...
புகைப்படங்கள் மற்றும் தகவல்: ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர், காயல்பட்டணம்.காம்.
நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
4. பிரயோஜனமான மழையாக ஆக்கிவைப்பானாக! posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[13 November 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 31416
அல்ஹம்துலில்லாஹ். யா அல்லாஹ் எங்களுக்கு இந்த மழையை பிரயோஜனமான மழையாக ஆக்கிவைப்பாயாக!. ஆமீன். நேற்று இரவு முதல் தொடர்ந்து அடித்த தூறல் மற்றும் மழையையும் மீறி பூமி அந்த தண்ணீரை உறிந்து விட்டது. அந்த அளவுக்கு நிலத்தடி நீர் நமதூரில் இல்லை. நீங்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள், தண்ணீர் ஓட வழியில்லாததாலும், சிமெண்ட் சாலை போட்டதன் விளைவு.
யா அல்லாஹ்! எங்களுக்கு பருவமழை பெய்ய வைத்து, மக்களுக்கும், விவசாயத்துக்கும் நன்மை தரும் மழையாக ஆக்கிவைப்பையாக! ஆமீன்.
5. Re:...குளிர்ந்தது குளிர்ந்தது...!!!!!!!!!! posted byHabeeb Mohamed (Saudi Arabia)[13 November 2013] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31418
மாஷா அல்லாஹ்...தொடரட்டும் உங்கள் நற்பணி...
குளிர்ந்தது மண் மட்டும் அல்ல,எங்கள் மனமும்தான்...ஆம்
வான் மழை வந்து மண் குளிர்ந்தது
மழைப்படம் வந்து மனம் குளிர்ந்தது....புகல் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே...அல்ஹம்து லில்லாஹ்....
படம் கண்டு மிக்க மகிழ்ச்சி...
7. Re:... posted byALS IBNU ABBAS (kayalpatnam)[13 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31429
அஸ்ஸலாமு அழைக்கும்,
நமதூரின் மழை காட்சிகள் அருமை,தப்ரூபமாக படம் பிடித்த தம்பி ரபீக்கின் காமெராவின் புதுமை.
மழை வேண்டும் நமதூருக்கு,அது போக வழியும் வேண்டும்,மழை நீர் குளமாக தேங்கியிருப்பதால் வீதிகளில் நடப்பது மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது,
வேகமாக வரும் பேரூந்து காரர்களுக்கு கொஞ்சமும் அறிவில்லை, நம் ஆடையின் மீது மழை நீரை வாரி இறைப்பதில் அவர்களுக்கு ஒரு அநாகரீகமான சந்தோசம்,
நமதூர் ஆடோகாரர்கள் பலர் இந்த மழை நீரை கண்டதும் மெதுவாக செல்வதை காண்கின்றோம்,அவர்களுக்கு நாம் நன்றி கூறுவோம்,
இன்னும் மழை உள்ளதாக அறிவிப்பு வந்தால்,தேங்கிய தெரு நீரை எப்படி வெளியேற்றுவது என்பதை நமதூர் பொது அமைப்புகள் ஓன்று கூடி ஆய்வு செய்தல் வேண்டும்,
கிணற்று நீர் கூடுவதற்கும் தோட்டத்து மரம்,செடிகள் வளர்வதற்கும் நிலத்தடி நீர் தேவை என்பதை நாம் எல்லோரும் அறிவோம்,நமதூர் தோட்டத்திற்கு பின்புறம் தேங்கி உள்ள குப்பையில் நீர் சேர்ந்தால் தொத்து நோய் கிருமிகள் பரவ அதிக வாய்ப்புண்டு ,கவனிப்பீர்
மாஷா அல்லாஹ்.....நம் ஊருக்கு தற்போதைக்கு தேவையான நல்ல மழைதான் .......இடைகாலத்தில் நமது ஊரில் நிறைய வீடுகளில் உள்ள கிணற்றில் சுத்தமாகவே தண்ணீர் இல்லாமல் கஷ்ட பட்டார்கள் ......வல்ல இறைவனின் அருண் கொடையால் இப்போது நமது ஊரின் வெட்பம் தனித்து ...மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்ல வழி பிறந்து உள்ளது ......
வல்ல இறைவன் இம் மழையின் பொருட்டால் நமக்கு நோய் நோய்டியற்ற நல்லதோர் வாழ்க்கையும் ....பரக்கத்தையும் ..அவனின் சிறப்பான வழி பாட்டில் தந்தருள்வானாகவும் ஆமீன்..........
மழை தண்ணீர் தான் நமது ஊரில் வெளியேற எந்த ஒரு வசதி வாய்ப்பும் இல்லாமல் ( தவிக்கிறது ) போய் விட்டது .... இந்த லச்சனத்தில் நமது ஊருக்கு ''' சிமிண்டு ரோடு ''' அவசியம் தானா ??
அருமை சகோதரர் .ஹிஜாஸ் மைந்தன் அவர்களின் அனைத்து நிழற் படங்களும் நாம் தற்போது நம் ஊரில் நேரில் இருப்பதையே ...நம் கண் முன் கொண்டு வந்து விட்டார் ......நிழற் படங்களும் அவ்வளவு ''' கிளியர் ''' ....பூந்து விளையாடி உள்ளார்.......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross