திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மூன்றாவது இடம் பெற்றுள்ளது. இது குறித்து அப்பள்ளி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளையொட்டி - மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை (புது டில்லி) துணையுடன், பெட் குழு கல்வி நிறுவனங்கள் இணைந்து, கட்டுரை போட்டி (ESSAY WRITING), விவாதம் (DEBATE) மற்றும் வினாடி-வினா (QUIZ) போட்டிகளை நவம்பர் 11, 2013 அன்று நடத்தின. 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான இப்போட்டிகள், அக்கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றன.
இப்போட்டிகளில் - கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சுமார் 50 பள்ளிக்கூடங்களின் மாணவ - மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பாக காயல்பட்டினத்தில் இருந்து கலந்துக்கொண்ட இப்பள்ளியின் 12 ம் வகுப்பு மாணவியர், கே.எஸ். பாத்திமா ஃபசீஹா (த/பெ கே.எம்.டி. சுலைமான்) மற்றும் ஏ.ஏ. கதீஜா (த/பெ அப்துல் அஜீஸ்) ஆகியோர் மூன்றாம் இடத்தினை பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவியருக்கு - பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கே.எம்.டி.சுலைமான்,
துணைச் செயலாளர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 12:20 pm / 13.11.2013] |