ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 15ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ், நவம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, சிறப்பான முறையில் நமது அபூதபீ காயல் நல மன்றத்தின் மூன்றாவது பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
அபூதபீ அமீரக வாழ் காயல் மாநகர சகோதர சகோதரிகள் அனைவரும் தங்கள் குடும்ப சகிதம் இப்பொதுக்குழு கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
தங்களின் உயர்ந்த ஆலோசனைகளையும், நமது காயல் மாநகரின் முன்னேற்றத்திற்கு தேவையான நல்ல பல கருத்துகளையும் தர அன்புடன் வேண்டுகிறோம்.
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05:00 மணி வரை
இடம்: பழைய ஏர்போர்ட் ரோடு, K.F.C. பார்க் [அல் நூர் மருத்துவமனை அருகில்] அபூதபீ.
குறிப்பு: தங்களின் வருகையை கண்டிப்பாக, ஜனாப் ஹுபைப் (கைபேசி எண்: 050 - 8490 978) அவர்களிடம் பதிவு செய்ய வேண்டுகிறோம்.
ஜும்ஆத்தொழுகைக்குப் பின் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகன பொறுப்பாளர்கள்:
ஜனாப் ஹபீப் - 050 819 0675 [அபூதபீ]
ஜனாப். நூருல் ஹக் - 055 406 1110 [முஸாபா]
அன்பின் அழைப்பாளர்கள்:
அபூதபீ காயல் நல மன்ற நிர்வாகிகள்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
செய்தித் துறை பொறுப்பாளர்
காயல் நல மன்றம் - அபூதபீ
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 1:00 pm / 13.11.2013] |