நேற்று (நவம்பர் 02ஆம் தேதி) இரவு 10.30 மணியளவில் காயல்பட்டினத்தில் தூறல் மழை துவங்கியது. இன்று நள்ளிரவு 00.15 மணிக்கு அது கனமழையாக மாறி, 01.00 மணி வரை கொட்டித் தீர்த்தது. பின்னர் சிறிது நேரம் தூறல் மழை பெய்து ஓய்ந்தது.
இன்றைய மழைக்காக நேற்று மதியம் 01.55 மணியளவில் நகர வான்பரப்பு முழுவதும் இலவம்பஞ்சுகளைக் கொட்டி வைத்தது போலான மேகங்களின் கண்கவர் காட்சிகள்:-
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
நடப்பு பருவத்தில், இதற்கு முன் பெய்த மழை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:...நம்மூரா இல்லை ஐரோப்பாவா posted byA.R.Refaye (Abudhabi)[03 November 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31160
நம்மூரா இல்லை ஐரோப்பாவா,சூப்பர் ஷாட்.சர்ச்சின் அறங்காவலர்கள் இப்படத்தை பார்க்க நேர்தால் கண்டிப்பாக இதை பெரிது படுத்தி பாதுகாப்பார்கள் என நினைக்கிறேன்.
கண் கவரும் மினாராக்கள் பறக்கும் ஒரு ஆன்மீக பட்டணத்தில் மனித நேயம் காக்க படுகிறது அதே நேரத்தில் "லகும் தீனுக்கும் வலியத்தீன்" இறை மறை வாக்கியம் காதோரம் ரீங்காரமாக கேட்கிறது.புகை படத்திற்கு பகை இல்லா தகையான வாழ்த்துக்கள்!
4. Not only his pen but also his photography speaks !! posted bySalai.Mohamed Mohideen (Bangalore)[03 November 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 31163
மிக அருமையான புகைப்பட காட்சிகள் ! SLR காமெரா இல்லாமலே பாயிண்ட் & சூட் காமெராவை வைத்தே இந்தப் போடு போடுகிறார் சகோ. ரபீக் !!
அவருடைய பேனா (எழுத்து) வுடன் சேர்ந்து இப்பொழுது புகைப்படமும் நம்முடன் பேசுகின்றது. அவருக்குள் ஒளிந்திருக்கும் புகைப்படக் கலைஞன் வீறிட்டு வெளியே வர ஆரம்பித்து விட்டான். வாழ்த்துக்கள் !!
5. அருமையான நிலை படங்கள் posted bySUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI)[03 November 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31164
அருமையான நிலை படங்கள் ஊரில் இருந்து நேரில் பார்த்தது போல் இருந்தது ...வாழ்த்துக்கள்
6. Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[03 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31165
புகைப்படங்களை பார்க்கும் போதே இது ஹிஜாஸ் மைந்தனின் கை வண்ணமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன் நினைப்பு பொய்யாக வில்லை. அவரே தான் இவ்வளவு அருமையாக புகைப்படங்கள் எடுத்துள்ளார்.தெளிவான படப்பிடிப்பு,வாழ்த்துக்கள் ரபீக் பாய்.
8. posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[03 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31178
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" எனும் திருமூலர் சித்தரின் முது மொழிக்கேற்ப அன்று காலையில் நம் நகரில் வானத்தில் வெண்மேகக் கூட்டங்கள் குவிந்து கிடப்பதைக் கண்டேன்.
என் மனதைக் கொள்ளை கொண்ட அந்த ரம்மியமான சூழலை எனது NOKIA N8 செல்ஃபோன் காமிரா மூலம் பதிவு செய்தேன். எழுத்தும், புகைப்பட ஆர்வமும் இளவயது முதலே என்னுள் ஒட்டியிருந்த இரட்டை குணங்கள் எனலாம்.
கண்டு மகிழ்ந்து கருத்துப் பதிந்த அத்தனை உள்ளங்களுக்கும், இக்காட்சியை பிரசுரித்த இணையதளத்திற்கும் எனது மனமார்ந்த நன்றி...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross