சஊதி அரபிய்யா – அப்ஹா நகரிலுள்ள காயலர்களுடன் இணைந்து, ஜித்தா மற்றும் ரியாத் நகரங்களில் வசிக்கும் காயலர்கள் ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி கொண்டாடினர்.
பெருநாள் விடுமுறையைக் கொண்டாடுமுகமாக, அந்நாட்டின் தெற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள – வளைகுடாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான அப்ஹா, கமீஸ் முஸாஇத், அஹத் ரபிதா, அல்ஷுதா ஆகிய நகரங்களுக்குச் சென்று, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிட்டு, பல்சுவை உணவுகளை உண்டவர்களாக பெருநாள் விடுமுறையை மனமகிழ்வோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.
தகவல்:
சட்னி S.A.K.முஹம்மத் உமர் ஒலி (ஜித்தா)
படங்கள்:
A.T.ஸூஃபீ இப்றாஹீம் (ரியாத்)
K.V.M.A.C.ஷாஹ் மீரான் ஸாஹிப் ரியாத் (ஜித்தா)
பொறியாளர் G.M.முஹம்மத் ஸுலைமான் (ஜித்தா) |