சவுதிஅரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 74-வது செயற்குழு கூட்டம் கடந்த 25.10.2013, வெள்ளி மாலை 05:30 மணியவில்,புனித மக்கா,அஜிசியாவில் உள்ள சகோ, சீனா, எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது இல்லத்தில் வைத்து நடந்தேறியது. அந்நிகழ்வுதனை பற்றி அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சவுதிஅரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 74-வது செயற்குழு கூட்டம் கடந்த 25.10.2013, வெள்ளி மாலை 05:30 மணியவில் புனித மக்கா, அஜிசியாவில் உள்ள சகோ, சீனா, எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது இல்லத்தில் வைத்து நடந்தேறியது. கூட்டத்திற்கு சகோ.எஸ்.ஹெச்.அப்துல்காதர் தலைமை ஏற்க, சகோ. அரபி, எம்.ஐ. முஹம்மது ஸுஐபு இறைமறை ஓத கூட்டம் ஆரம்பமானது, தொடர்ந்து சகோ, சீனா, எஸ். ஹெச். மொகுதூம் முஹம்மது வந்திருந்த அனைவர்களையும் அகமகிழ வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.
மன்றத்தின் செயல்பாடுகள்:
கடந்த செயற்குழுவில் நடந்த நிகழ்வுகளையும், வழங்கிய மருத்துவ மற்றும் உயர் கல்விகளுக்கான உதவிகளையும் நிறைவேற்றிய தீர்மானங்களையும் எடுத்துரைத்தும் சவுதியின் தென்மண்டலம், அப்ஹா-கமீஸ் நகர்களுக்கு அருகில் இருக்கும் அஹது ரபிதா எனும் நகரிலுள்ள காயல் இல்லத்தில் இம்மாதம் 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளன்று காலை மன்றத்தின் அம்மண்டல உறுப்பினர்களின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றதின் விபரம் இதுவரை நாம் செய்துள்ள சேவைகள், நகர் நலத்திட்டங்கள் குறித்து பேசியதும் நெடுந்தொலைவில் இருந்தபோதிலும் நகர் நலன் கருதி நம் மன்றத்தின் உறுப்பினர்களாக தங்களையும் இணைத்து சந்தா தொகைகளையும் செலுத்தி வரும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறி கொண்ட நடப்புகளையும் அவர்களும் ஆர்வமாக எல்லாம் கேட்டு கொண்டதும் விளக்கமாக எடுத்துரைத்தார் மன்ற செயலாளர் சகோ.சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
அடுத்து பேசிய மற்றுமொரு மன்ற செயலாளர் சகோ,எம்.ஏ.செய்யத் இப்றாஹிம் ஊரிலிருந்து புனித ஹஜ் கடமைதனை நிறைவேற்ற தன் குடும்பத்துடன் புனித மக்கா வருகை தந்துள்ள நம் மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி சகோ, ஹாஜி.ஏ.எம்.இஸ்மாயில் நஜிப் அவர்கள் நம்மன்றத்திற்காக ஆற்றும் பணிகள் நாம் வழங்கும் உதவி சரியான பயனாளிக்குத் தான் சென்றடைகிறதா என்பதை அவர்கள் அறிந்து செயல்படும் விதம் இம்மன்றம் துவங்குவதற்கு அவர்கள் இங்கு இருக்கும் சமயம் காட்டிய ஆர்வம் போன்ற நல்ல செயல்பாடுகளை எடுத்துக்கூறி அவர்கள் தொடர்ந்து இம்மன்றத்திற்காக ஒத்துழைக்கவும், அவர்கள் மற்றும் நம்மில் அனைவரும் செய்த ஹஜ் ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகவும் அமைந்தும் அவர்களின் நல்வாழ்விற்கும் நாம் துஆ செய்வோமாக என்று கூறியதுடன், தான் ஊர் சென்றிருந்த போது பலர் நம்மன்ற செயல்பாடுகளை பாராட்டி பேசியதையும், நம் மன்றத்தால் பயன் பெற்றோர் நம்மை வாழ்த்தி துஆ செய்ததையும் தன்னால் காண முடிந்தது. ஆக நாம் மனமுவந்து செய்யும் உதவிகள் நமக்கு இறைவன் புறத்திலிருந்து பெரும் நற்கூலியை பெற்று தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்று கூறியதோடு, உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிபாவின் ஆரம்ப கால அதன் செயல்பாடுகள் எந்த நிலையில் இருந்து வருகிறது என்பதனையும், மன்றத்தின் தலைவர் சகோ.குளம்,எம்.ஏ.அகமது முஹியதீனுடன் இணைந்து, இருவரும் நல்ல பல கருத்துக்களை விபரமாக எடுத்து வைத்தனர்.
தொடர்ந்து மக்ரிப் தொழுகை கூட்டாக நிறைவேற்றிய பின் சூடான தேனீர் இடைவேளைக்கு பிறகு கூட்டம் மீண்டும் துவங்கியது.
நிதி நிலை:
கல்வி மற்றும் மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீடு,சந்தாக்களின் வரவு நிதியின் இருப்பு மற்றும் விடுப்பு விபரங்களை துல்லியமாக பட்டியலிட்டார் பொருளாளர் சகோ. எம். எஸ். எல்.முஹம்மது ஆதம்.
கல்வி பயில உதவிகள்:
உயர் கல்விக்கான உதவிகேட்டு வந்திருந்த அனைத்து விண்ணப்பங்களையும் மன்ற உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு விண்ணப்பங்களை முறைப்படுத்தி இணைக்கப்பட்ட கல்வி சான்றிதழ் மற்றும் பள்ளிவாயில் ஜமாத் பரிந்துரையின்படி வந்த மனுக்கள் ஏற்கப்பட்டு பொறியியல் பயிலும் மாணவர்கள் 7 நபர்கள், MBA, MCA இரண்டாமாண்டு பயிலும் 2 நபர்கள் மற்றும் ஆசிரியை பயிற்சி கல்வி B,Ed முதலாமாண்டு பயிலும் 2 பெண்கள் என மொத்தம் 11 நபர்களுக்கு உயர்கல்விக்கான உதவி தொகைகள் வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
சிறப்பு விருந்தினரின் பாராட்டு:
கருத்து ஒற்றுமை நம்மிடம் பலவாறாக இருந்தாலும், தொழுகை, ஜகாத், சதக்கா தான தர்மங்கள் வழங்குதல் போன்ற இவைகளில் நாம் என்றும் ஒரே கருத்துடன் இருந்து வருகிறோம். நல்ல எண்ணங்களுடன் நாம் செய்யும் நலஉதவிகள், இம்மன்றத்தின் மூலம் நாம் ஆற்றும் சேவைகள், நிச்சயமாக வல்ல அல்லாஹ் இந்த பணிகளுக்கு பெரிய உபகாரம் அளிப்பான். தான் ஜித்தாவில் பணிபுரிந்த சமயம் நம்சகோதரர்களுடன் சேர்ந்து நம்மூர் மக்களுக்கு நல்லதை செய்வதற்காக இங்கு நாம் ஒரு மன்றம் துவங்க வேண்டும் என்ற ஆர்வம் காட்டியதும். இன்று இம்மன்றம் இறையருளால் நன்றாக வேரூன்றி நம் மக்களுக்காக, தனது வேலை பளுவை எல்லாம் பொருட்படுத்தாது, நற்சேவை ஆற்றி வருவதை பார்த்து தன்னை போன்று நம்மில் அனைவரின் நெஞ்சமும் நெகிழ்கிறது.
மேலும் இம்மன்றமுடன் பலமன்றங்கள் இணைந்து ஏற்படுத்திய இக்ரா கல்வி கூட்டமைப்பானது சிறப்பாக செயல்பட்டு கல்வி பயில வசதியில்லா எத்தனையோ மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்து காயலில் கல்லாமை இல்லாமை ஆக்குவோம் என்ற முனைப்புடன் செயல்பட்டு கல்வி சேவைய செய்து வருகிறது. இதுபோல் நம் நீண்ட கால வேட்கையான மருத்துவத்திற்க்கென்று ஷிபா என்ற ஒரு அமைப்பையும் உலக காயல் நலமன்றங்களுடன் நம்மன்றமும் இணைந்து அனுசரணை ஆலோசனைகளுடன் ஏற்படுத்தி சமீபத்தில் அதுவும் செயல்பட தொடங்கி உள்ளது. ஆக நம் மக்களுக்காக ஆற்றி வரும் உங்களது பேருதவிகள் நிச்சயமாக பெரும் பலனை பெற்றுத்தரும் என்று உள்ளம் பூரிக்க தனது உரையை நிறைவு செய்தார் சிறப்பு விருந்தினரான இம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி சகோ. ஹாஜி, ஏ.எம்.இஸ்மாயில் நஜிப்.
அடுத்து கேரள,திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் உறுப்பினர் சகோ,ஹாஜி எம்.என்.முகம்மது அஷ்ரப் இம்மன்றத்தின் சேவைகளை பாராட்டியதோடு தான் சார்ந்துள்ள தி புரம் மன்றத்தின் செயல்பாடுகளையும் எடுத்துரைத்தார்.
தீர்மானங்கள்:
1 – ஜித்தா காயல் நற்பணி மன்றம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்து
கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தாயகம் சென்றும் தொடர்ந்து நமது மன்றத்தின் உள்ளூர் நலப்பணிகளை மனமுவந்து செய்தும்,பயனாளிகளை வீடு சென்று நேரடியாக தொடர்பு கொண்டு நம்மன்ற உதவி தொகைகளை வழங்கி வரும் சகோ. ஹாஜி, ஏ.எம்.இஸ்மாயில் நஜிப் அவர்களை இந்த செயற்குழு மனதார பாராட்டி கெளரவிக்கிறது.
2 – ஷிபாவிலிருந்து மருத்துவ உதவி வேண்டி வரும் மனுக்களை துரிதமாக பரிசீலித்து முடிவெடுக்க கீழ்க்கண்ட ஏழுபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கு இச்செயற்குழு அனுமதி அளிக்கிறது.
1. சகோ, எம்.எம். மூசா சாஹிப்,
2. சகோ,குளம்,எம்.ஏ.அஹ்மத் மெய்தீன்.
3. சகோ, மருத்துவர்.எம்.ஏ.முஹம்மது ஜியாத்.
4. சகோ,எம்..ஏ.செய்யத் இப்ராகிம்.
5. சகோ,எம்.எஸ்.எல்.முகம்மது ஆதம்,
6. சகோ, சீனா,எஸ்.ஐச்.மொஹ்தூம் முகம்மது.
7. சகோ,சட்னி, எஸ்.எம்..முகம்மது லெப்பை.
3 – அடுத்த 75-வது செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் மாதம் 06-ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நடத்திடவும் முடிவு காணப்பட்டது.
சகோ.ஹாஜி,ஏ.எம்.இஸ்மாயில் நஜிப்.சகோ,ஹாஜி எம்.என்.முகம்மது அஷ்ரப் மற்றும் இவரது மகன் இளவல் ஹாஜி எம்.எ.மீரா நெய்னா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தார்கள். சிறப்பு விருந்தினர் சகோ.ஹாஜி,ஏ.எம்.இஸ்மாயில் நஜிப் அவர்களுக்கு சகோ, எஸ்.ஐச். ஹுமாயூன் கபீர் இம்மன்றத்தின் சார்பில் நினைவுப்பரிசினை வழங்கி சிறப்பு செய்து கொண்டார்.
நன்றி கூறல்:
சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க,
சகோ.எஸ்.எஸ்.ஜாபர் சாதிக் துஆ கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
சகோ.எஸ்.ஹெச். சீனா மொகுதூம் முஹம்மது அனுசரணையுடன் அல்பைக், ப்ரோஸ்ட் இரவு உணவு அருமையாக பரிமாறப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை சகோதரர்கள் கே.செய்கு அப்துல் காதர்,தீன் பாய் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
தகவல் மற்றும் படங்கள் :
எஸ்.ஐச்.அப்துல் காதர்,
எஸ்,ஏ.கே.செய்து மீரான்
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
25.10.2013.
|