காயல்பட்டினம் மகுதூம் தெருவை சார்ந்த முஹம்மது நூருல் இலாஹி
(தந்தை பெயர்: ஷாஹுல்ஹமீது (செ.இ)) - ஏப்ரல் / மே 2013 இல் நடைபெற்ற BE (Electrical and Electronics Engineering) பிரிவுக்கான
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் - பல்கலைக்கழகம் அளவில், 11ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
சென்னை ப்ரின்ஸ் வெங்கடேஷ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரியில் பயின்ற காயல் மாணவர் Cumulative Grade Point Average (CGPA)
முறையில் 10 க்கு 9.02 மதிப்பெண்கள் பெற்று, FIRST CLASS WITH DISTINCTION தகுதியில் தேர்வு பெற்றுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் - அனைத்து பாடங்களிலும், தோல்வியடையாமல், முதல் வாய்ப்பிலேயே வெற்றிப்பெறும் மாணவர்களுக்கே ரேங்க்
வழங்குகிறது. மேலும் - ஒரு படிப்பு பிரிவில் தேர்வாகும் 20 மாணவர்களுக்கு ஒரு ரேங்க் என்ற அடிப்படையில், 50 ராங்குகள் வரை
வழங்கப்படுகிறது.
BE (Electrical and Electronics Engineering) பிரிவு தேர்வுகளில் 5544 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதில் 145 மாணவர்களுக்கு
தரவரிசை பட்டியலில் முதல் 50 ராங்குக்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடித்தக்கது.
இம்மாணவருக்கான பதக்கம் பிப்ரவரி/மார்ச் 2014 இல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்:
ஹாஜி,
ரியாத், சவூதி அரேபியா. |