தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 3ஆவது யூனிட்டின் பாய்லரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இந்த அனல்மின் நிலையத்தின் 2வது மற்றும் 3-வது யூனிட்டின் சில நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. இந்தப்பழுது நேற்று முன்தினம் சரி செய்யப்பட்டது.
இந்நிலையில், 3ஆவது யூனிட்டில் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி பழுது ஏற்படுவதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர். தமிழகம் மின்மிகை மாநிலமாக விரைவில் மாறும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ள நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் பழுது மின்வாரிய அதிகாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள இப்பழுது காரணமாக, காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை, மாலை, இரவு நேரங்களில் அடிக்கடி பல மணி நேரங்கள் மின்வெட்டு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. |