தமிழ்நாடு மாநில அளவிலான யோகா போட்டியில், சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவ-மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். இதுகுறித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தமிழ்நாடு மாநில யோகா வளர்ச்சிக் கழகம் சார்பில், “தமிழ்நாடு மாநில யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2013” போட்டி, இம்மாதம் 27ஆம் தேதியன்று, கோவில்பட்டியில் நடைபெற்றது.
இப்போட்டியில், காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து பங்கேற்ற மாணவியருள்,
ஒய்.எம்.மைமூனா ஃபாத்திமா, எச்.ரஹ்மத் நிஸா, எம்.ஏ.கே.பி.ஆதம் பீவி ஆகியோர் - 7 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரண்டாமிடத்தைப் பெற்றனர்.
இசட்.எம்.தஸ்னீமா, எஸ்.எல்.ஜெய்னுல் அரஃபா நாச்சி ஆகியோர் - 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடத்தையும், எம்.ஏ.கே.பி.ஆதம் பீவி இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
9 வயதுக்குட்பட்டோர் பிரிவில், கே.ஏ.கதீஜா தாஹிரா, எம்.எஸ்.முஹம்மத் நவாஸுத்தீன் ஆகியோர் முதலிடத்தையும், கே.பவித்ரா, எம்.பேச்சி முத்து ஆகியோர் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவ-மாணவியரை, பள்ளியின் தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |