தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை மாணவரணி சார்பில், காயல்பட்டினம் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளி வளாகத்தில், புதிய நூலகம் துவக்க நிகழ்ச்சி, இம்மாதம் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின், இரவு 07.00 மணியளவில் நடைபெற்றது.
பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ அறிமுகவுரையாற்றி, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல முன்னாள் பொறுப்பாளர் ஹாமீம் இப்றாஹீம், நூலகத்தைத் திறந்து வைத்ததோடு, நிர்வாக மேலாண்மை தொடர்பாக உரையும் ஆற்றினார்.
பின்னர், அவர் மாணவர்களுக்கு தனியே அறிவுரை வழங்கினார்.
நூலக துவக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் வட்டியில்லா கடனுதவித் திட்டம் துவக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நகர த.த.ஜ. நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் துவக்கம் முதல் நிறைவு வரை, அமைப்பின் உள்ளூர் தொலைக்காட்சியான ஐடிவியில் நேரலை செய்யப்பட்டது. |