மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான வினாடி-வினா போட்டியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் உட்பட இருவர் முதலிடம் பெற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
மருத்துவக் கல்லூரிகளின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ-மாணவியர் பங்கேற்கும் வகையிலான மாநில அளவிலான வினாடி-வினா போட்டி, தூத்துக்குடியில் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து 10 மருத்துவக் கல்லூரிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்ற இப்போட்டியில், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவர்களான - காயல்பட்டினத்தைச் சேர்ந்த சுல்தான் ராஷித், கேரள மாநிலத்தைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் ஆகியோரடங்கிய அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் பங்கேற்ற இதர கல்லூரிகளின் மாணவர்கள் அனைவரும் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவ-மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வெற்றியைத் தொடர்ந்து, அண்மையில், தோல் நோய் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற CUTICON 2013 மாநாட்டின்போது, மேற்படி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இம்மாணவர்கள் மருத்துவ உயர்கல்வி பயில்கையில், இச்சான்றிதழ் மூலம் 5 மதிப்பெண்களைக் கூடுதலாகப் பெற்றிட இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் P.M.முஹம்மத் ஸர்ஜூன்
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 21:43 / 28.10.2013] |