சஊதி அரபிய்யா – அப்ஹா நகரிலுள்ள காயலர்களுடன் இணைந்து, ஜித்தாவிலிருந்து சென்ற காயலர்களும் ஹஜ் பெருநாள் கொண்டாடினர்.
சஊதி அரபிய்யாவில் இம்மாதம் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
பெருநாளை முன்னிட்டு, அந்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள - சுமார் 2800 மீட்டர் உயரமுள்ள உயர்ந்த மலைகளைக் கொண்ட குளிர்பிரதேச சுற்றுலாத்தலமாகத் திகழும் அழகிய அப்ஹா-கமீஸ் நகர்களுக்கு அருகில், அஹது ரபிதா எனும் நகரில், முஸல்லா ஈத் - பெருநாள் திடலில் காலை 06.30 மணிக்கு ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரை நடைபெற்றது.
இத்தொழுகையில் அப்ஹா வாழ் காயலர்கள் மற்றும் ஜித்தாவிலிருந்து சென்ற காயலர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்ற பின்னர் காயலர்கள் ஒன்றுகூடி வாழ்த்துக்களைப் பரிமாறி, ஆரத்தழுவி தமக்கிடையில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் காயலர்கள் பெரும்பான்மையாக இணைந்து வசிக்கும் காயல் இல்லத்தில் கே.எம்.செய்யித் அஹ்மத் கபீர் கைவண்ணத்தில், ரொட்டி. இறைச்சி வகைகள், பால் பாயசமுடன் சுவையான பெருநாள் விருந்து அனைத்து காயலர்கள் மற்றும் யமன், பாகிஸ்தான், பங்களாதேஷ் நண்பர்களுக்கும் பரிமாறப்பட்டது.
தகவல் & படங்கள்:-
சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்
ஜித்தா - சஊதி அரபிய்யா |