வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமென, ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 17ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை அஸ்ர் தொழுகைக்குப் பின், மன்றத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.ஆர்.ரிஃபாய் தலைமையில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். பின்னர், நகர்நலன் குறித்து உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.
3ஆவது பொதுக்குழு:
இன்ஷாஅல்லாஹ், மன்றத்தின் 3ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை, எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, அபூதபீ பழைய ஏர்போர்ட் ரோடு, K.F.C. பார்க்கில் [அல் நூர் மருத்துவமனை அருகில்] வைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களின் முன்னேற்பாடுகள் தொடர்பான பொறுப்புகள் குறித்து, கே.வி.எஸ்.ஏ.ஹபீப் முஹம்மத் தலைமையில் விரிவாக விவாதிக்கப்பட்டு, நிலுவைப் பணிகளை விரைந்து செய்து முடிக்க கேட்டு கொள்ளப்பட்டது.
மன்றத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ துஆவைத் தொடர்ந்து, கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:-
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் |