1. Reஅதிகாலை விருந்தல்லவோ? posted byமுஹம்மது ஆதம் சுல்தான். (yanbu)[31 October 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31102
முகில் கிழித்து முகம் துடைத்து மலர் சிரிப்புடன்
இம் மண்ணுலகை மெல்லப்பார்க்கும் கதிரவ காரிகையே-நீ
மெருகுடன் மெது,மெதுவாய் மேலே ஏறும் பயணதைப் பார்த்து
பிரமையாகியது பசுபடை பட்டாளங்களே-அதன் அழகிய
அணிவகுப்பு நம் அகத்திற்கு கோர்அதிகாலை விருந்தல்லவோ?
2. இதுவும் ஒரு வகையில் படை சம்பந்தமானதுதான். posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[01 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31112
இந்த பசுமாடுகள் அதிகாலை இளம் வெயிலில் அணி திரண்டு நிற்பதை பார்க்கும் போது பண்டைய காலத்தில் தமிழர்களின் போர் முறை பற்றி நினைவுக்கு வருகிறது. இன்றைய நவீன யுகத்தில் எதிரி நாட்டு மக்கள் மீது அணு ஆயுதங்கள் வீசியும், ரசாயனத்தாக்குதல் நடத்தியும் மக்களை கொன்றொழிக்கும் வழக்கத்திற்கு நேர் மாறாக அன்று தமிழர்களால் போர் நியதிகள் பேணப்பட்ட அற்புத கால கட்டம் மனக் கண் முன்னே தோன்றி மனதை உறுத்துகிறது.
புறத்திணையை 7 வகையாகத் தொல்காப்பியமும், 12 வகையாகப் புறப்பொருள் வெண்பாமாலையும் தொகுத்துக் காட்டுகின்றன. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் எனும் ஒன்பது திணைகளில் வெட்சி, கரந்தைத் திணைகள் பசுக்களை கவர்தல், அவற்றை மீட்டல் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது,
அக்கால மக்கள் வாழ்வில் இடையர் தொழிலும், வேளாண்மையும் மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் பொருளாதாரம் பெரும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆதலின் ஒரு நாட்டின் ஆ நிரைகளை கவருவது அந்நாட்டை பொருளாதார வகையில் தாக்குவதாகும், எனவே, ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்க முனைகையில் அந்நாடின் ஆ நிரைகளைக் கவருவது போரின் முதல் நடவடிக்கை.
மேலும், ஆரம்ப காலங்களில் மக்கள் சிறு கூட்டங்களாய் வாழத் துவங்குகையில் தங்களோடு ஆ நிரைகளையும் பேணி வந்தனர், இரண்டு சிறு குடிமக்களுக்கிடையே போர் நிகழ்கையில் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளைக் கவருவதே இயல்பு, இதுவே பிற்காலப் பேரரசுகளின் போர் முறையிலும் தொற்றிக்கொண்டுவிட்டது.
மேலும், தீங்கில்லா உயிர்களைத் தங்கள் போர்த்தொழிலால் வருத்தாமல் தவிர்க்கவும் மறவர் ஆநிரைகளைக் கவர்ந்து அவற்றை பாதுகாத்தனர் எனவும் உரைக்கலாம். பகைவரின் ஆ நிரைகளை கவருவதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் வெட்சிப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. வெட்சி ஒருவகை மரமாகும், அது சிவந்த நிறமுடைய பூக்களைக் கொண்டது.
புறத்திணைகளுள் வெட்சிக்கு அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறான, கரந்தைத் திணையாகும். பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆ நிரைகளை மீட்டுவருவதே இத்திணையாகும்.
எதிரி நாட்டை பொருளாதார வகையில் சீர்குலையச் செய்ய எண்ணி அந்நாட்டின் ஆ நிரைகளை கவர்ந்து வந்த பின் இதற்கு பதிலடியாய் பகைவர் கவர்ந்து கொண்ட தம் ஆ நிரைகளை மீட்டுவந்து தன்னாட்டை (நாட்டின் பொருளாதாரத்தை) காப்பது அவசியமாகிறது. கரந்தை திணையானது ஆநிரைகளை வெட்சி வீரர்கள் கவராதவாறு தடுக்கும் திணையாகும்.இதனுள் வெட்சியார் மேற்கொள்ளும் தடுப்பு முறை சில துறைகளாக விளக்கப்படுகின்றன. அரிய ஆநிரைகளை கவரும் போரில் பகைவரை வெற்றிகொண்டு ஆநிரைகளை ஓட்டிச் செல்லல். ஆக்களை மீட்டுக் கொணர்தல் மீட்டு வரும் போது சீர்மை மிகுந்த தங்களது வேந்தனின் சிறப்பை எடுத்தியம்புதல் நெடுமொழி கூறல். (முயற்சி மிக்க வஞ்சின மொழியை தன்னோடு சார்த்திக் கூறுதல் (அதாவது “இதை முடிக்காவிட்டால் உயிர் விடுவேன்“ என்பது).
பகைவர் கவர்ந்து சென்ற ஆ நிரைகளை மீட்பதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் கரந்தைப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. கரந்தை என்பது கொட்டைக் கரந்தை என்னும் ஒரு பூண்டு வகையாகும்.
நன்றி: தமிழ் விக்கிபீடியா.
தொகுப்பு: ராபியா மணாளன்
4. Re:... posted byhasbullah mackie (dubai)[01 November 2013] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31117
கடற் கரை பயானாளிகள் சங்கம் இப்போதும் ஊரில் செயல்படுகிறதா? இவைகளுக்கும் சேர்த்து பராமரிக்கப்படுகிறதா? நல்ல ஒரு அணிவகுப்பு........ இதற்கும் ஒரு பேர் வைக்கலாம். மாட்டு படை என்று.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross