காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவை, இம்மாதம் 28ஆம் தேதியன்று, சென்னையிலுள்ள அவரது போயஸ் தோட்டத்தில் நேரில் சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.
இதனை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் அதிமுக கட்சியினர் - தம் கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவிக்கும் சுவரொட்டியை நகரெங்கும் ஒட்டியுள்ளனர்.
படம்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |