Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[04 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31210
நடுநிலையான எனக்கு தம்பி ஜகாங்கீர் ஐக்கிய பேரவையின் தீவிர ஆதரவாளர் என உணர முடிகிறது. posted by syed ahamed (chennai )
ஜகாங்கீரின் கருத்துப்பதிவில் எந்த வார்த்தையை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்?
நமது ஊரைச் சார்ந்த நான்கைந்து பேர் வெளியூர் எங்காவது சென்று அங்கு ஏதாவது ஒரு அரசியல் தலைவருக்கு பொன்னாடை போர்த்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஊடகங்களில் வெளியிடும் செய்தி இதுவாகத்தானிருக்கும். 'அரசியல் தலைவரை காயலர்கள் வரவேற்றனர்'. "காயல்பட்டணத்தில் வரவேற்பு" என்பது வேறு "காயலர்கள் வரவேற்றனர்" என்பது வேறு. அது போல் தான் இதுவும். posted by Sabeer (Now @ Mumbai)
இம்மாதிரி மனசாட்சி இல்லாமல், மலுப்பலாக, காரணங்களை தேடிபிடித்து பதில் சொல்வது தவறென்று தங்களுக்கு தெரியவில்லையா? தவறை தவறு என்று ஒத்துக்கொள்ளாமல், வக்காலத்து வாங்குவது நியாயமா ? ஜகாங்கீரின் கருத்தை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள். உண்மை விளங்கும்.
வெளியூரில் ஒரு தலைவரை சில காயலர்கள் வரவேற்ற செய்தியை, காயலர்கள் என்று வெளியிடுவதும், இதுவும் ஒன்றுதான் என்று சொல்கிறீர்களே? கட்சியில் சேர்ந்துவிட்டு வருகின்ற ஒருவரை, எல்லா கட்சிகாரர்களும் இருக்கும் ஜமாஅத்தின் சார்பாக, அதன் நிர்வாகிகள் வரவேற்றார்கள் என்று தகவல் வருவது, நகர்மன்ற தலைவரின் அந்த செயலை, ஜமாஅத்தினர் அனைவரும் அங்கீகரித்தத போல் ஆகாதா? ஏட்டிக்குபோட்டி பதில் சொல்வது என்று இல்லாமல் யோசித்து பதில் சொல்லுங்கள்.
ம.தி.மு.க. கட்சி தலைவர் வை.கோ. அவர்களுக்கு வரவேற்பளிக்கிறோம் என்ற பெயரில் கல்லூரி மாணவிகளை தெருவிற்கு இழுத்து மாற்று மதத்தவர்கள் நமது சமுதாய மாணவிகளின் கைகளில் துண்டுப்பிரசுரம் கொடுத்து அதை அவர்கள் கல்லூரியின் கட்டுப்பாட்டிற்கு கட்டுப்பட்டு வேறுவழியின்றி பெற்றுக் கொண்டார்களே. அதற்கு உங்களுடைய கருத்து என்ன?
'மதுவிலக்கை வலியுறுத்தித் தானே நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நல்ல காரியத்திற்காகத் தானே வரவேற்பு கொடுத்துள்ளார்கள் அதில் என்ன தப்பு' என்று நீங்கள் வினவலாம். அது போல் தான் இதுவும்.
ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தான் அதிமுக தலைமையிடத்தை நாடியுள்ளார்கள். posted by Sabeer (Now @ Mumbai)
வை.கோ-வை வரவேற்ற மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் அனுமதியோடு அதை செய்தார்கள். அது சரியா. தவறா என்பது அந்நிறுவாகத்திடம் கேட்கவேண்டிய கேள்வி. அது சரி என்றால் இதுவும் சரி என்று சொல்வது, சரியல்ல என்பது உங்களுக்கு தெரியும். இருப்பினும் மனமுறண்டாக வாதம் செய்கிறீர்கள்.
மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதும், ஊர் நன்மைக்காக ஒரு கட்சியில் இணைவதும் ஒன்று தான் என்ற தங்களின் தத்துவத்தை படித்து எனக்கு புல்லரித்து போனது. அல்லாஹ் உங்களைப் பொன்றோருக்கு, நடுநிலைமை எண்ணத்தை கொடுப்பதோடு, உங்களைப் போன்றோரிடமிருந்து இந்த ஊரையும் காப்பாற்றுவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross