சவுதி = சர்வதேசம் ? posted byAbdul Wahid S. (Kaayalpattinam)[07 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31277
"They ask you (O Muhammad ) about the new moons. Say: These are signs to mark fixed periods of time for mankind and for the pilgrimage....... (2:189)
" (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன........ (2:189)
அல்-குரான், பிறை மனிதர்களுக்கு காலத்தை காட்டுபவையாகவும் (காலண்டர்) ஹஜ்ஜை அறிவிப்பதாகவும் (அமல்களை செய்வதற்கு) உள்ளது என்று தெள்ளத் தெளிவாக கூறுகிறது. ஆனால் சவுதி அரசுக்கு காலண்டருக்கு ஒரு பிறையும் இபாதத்துகளை செய்வதற்கு வேறொரு பிறையும் தேவைப்படுகிறது. வானவியல் (அறிவியியல்) அறிவு கொஞ்சம் கூட இல்லாதவர்கள் கண்ணை மூடிக்கொண்டு சவுதி அரசின் முடிவை இபாதத் விசயத்தில் மற்றுமன்றி உலக நடைமுறைகளிலும் பின்பற்றுகிறார்கள்.
உதாரணம் ; சவுதி அரசு சொன்ன அதே காரணத்தை அல்-ஜாமிஉல் அஸ்கர் நிர்வாகமும் கூறுகிறது. அதாவது நவ 3 ம் தேதி பிறை தென்படாததால் நவ 4 துல் -ஹஜ் மாதத்தின் கடைசி நாளென்று.
பிறை என்று தென்படும் ? மேலும் நாளின் ஆரம்பம் எது? இவை இரண்டிற்கும் இவர்கள் விடை தேட முற்பட்டால்தான் உண்மையை அறிய முடியும்.
நவ 3 அன்று அமாவாசை நாள் (சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் நேர்கோட்டில் வருவது). பிறை கண்ணுக்கு மறைக்கப்படும் நாள் (சங்கம தினம்). அன்று குறைந்தது 12 மணி நேரத்திற்கு உலகில் எந்த பகுதியிலும் பிறை தென்படாது. அந்த பிறை தென்படவேண்டுமேன்றால் குறைந்தது 6 டிகிரி அது நேர் கோட்டிலிருந்து விலகி இருக்க வேண்டும். இது நடப்பதற்கு குறைந்தது 12 மணி நேரம் தேவை. அதுவும் அந்த பிறை அன்று சூரியன் மறைந்த பின்தான் பார்க்க இயலும். சங்கமம் நிகழும்போது நமதூர் நேரம் மாலை 6:20. சரியாக 12 மணி நேரம் கூட்டினால் நாம் அடுத்த (4ம் தேதி) நாள் கலை 6;20. அன்று சூரியன் உதித்த நேரம் காலை 6;09 சந்திரன் உதித்த நேரம் காலை 6;42. ஆகையால் பிறையை பார்க்க இயலாது. அன்று மாலை 6:20 மணிக்கு வளரும் பிறையின் வயது 24 மணி நேரம். பிறையை கண்ணால் காண முடியும். காரணம் சூரியன் மறந்த பின் (மாலை 5:53) சந்திரன் மறைந்ததால் (மாலை 6:44).
அனால் அன்று மேற்கு வானில் மழை மேகமாக இருந்ததால் நமதூரில் அன்று (4ம் தேதி) பிறை கண்ணில் தென் படவில்லை. பிற நாடுகளில் தென்பட்டிருக்கிறது.
-----------------------------
எப்போதெல்லாம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மார்கத்தில் அறிவுறுத்தப்பட்ட அமல்களை செய்வதற்கு துணைக்கு எடுத்துக் கொள்ளும்போது (விஞ்ஞான அறிவு இல்லாத) மௌலவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக பெரும்பாலான துணைக் கண்ட மௌலவிகள்.
உதாரணம்.
1) 200 வருடங்களுக்கு முன் 5 வேலைத் தொழுகைக்கு கால அட்டவணை விஞ்ஞான அடிப்படியில் துல்லியமாக கணக்கிட்டு தயாரித்த போதும்.
2) 70 வருடங்களுக்கு முன் ஒளிபெருக்கியை பயன்படுத்தி "அதான்" (பாங்கு) சொல்லும்போது.
3) 60 வருடங்களுக்கு முன் ஹஜ் செல்வதற்காக பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டு நிழற்ப்படம் (Photos) எடுக்கும்போது.
இவைகளுக்கு எதிராக பாத்வவை வழங்கியுள்ளார்கள்.
பல நூறு வருடங்களுக்கு முன் இவர்கள் கொடுத்த பாத்வாவில் ஒன்று குர்-ஆனை பிற மொழயில் மொழிபெயர்ப்பது ஹராம் என்று. இதனால்தான் என்னவோ தமிழகத்தில் முஸ்லிம்கள் 1300 ஆண்டுகளாக இருந்தும் சுமார் 60-70 ஆண்டுகளுக்கு முன்புதான் அல்-குரான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத் தகுந்தது.
குர்-ஆனை தமிழில் முதன் முறையாக மொழிபெயர்த்த பெருமை முஸ்லிம் லீகின் முன்னாள் தலைவர் மர்ஹூம் அப்துஸ் சமத் சாஹிப் அவர்களின் தந்தையைச் சாரும்.
----------------------------
ஏரியா பிறை, மண்டலப் பிறை, மாநிலப் பிறை, தேசியப் பிறை, சர்வதேசப் பிறை ஆகிய நிலைபாட்டில் உள்ளோர்களிடம் நாம் கேட்க நினைக்கும் ஒரு கேள்வி.
கண்ணால் பார்க்க வேண்டும் என்பதுதானே உங்கள் கொள்கை. கண்ணால் என்றால் வெறுங்கண்ணாலா அல்லது Binoculars, Telescope போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் காணும் பிறையை ஏற்றுக் கொள்வீர்களா?
What about மூக்குகண்ணாடி(Eye Spectacle / Eye Glasses)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross