ஒரு பெருநாள்...ஊர் முழுக்க என வரும் காலம் கனிவதெப்போது...? posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[09 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31329
கட்டுரையாளரின் ஆதங்கம் வரிக்கு வரி புரிகிறது. என்ன செய்ய? எப்படியாவது இதற்கோர் தீர்வு வந்துவிடாதா? எனும் ஏக்கமும், தாக்கமும் மனதை அழுத்துவது உண்மை!
ஊருக்குள் ஒன்பது பெருநாள் அதுவும் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு அமைப்புகள் என ஊர் ஒற்றுமை மறக்கப்பட்டு, தனித்தனி குழுக்களாகப் பிரிந்து போய்விட்டோம். ஒரே வீட்டில் சிலருக்கு நோன்பு சிலருக்கு பெருநாள். மனம் வலிக்கிறது.
சரியான வழிகாட்டிகள் இல்லாத குறையா?
அல்லது உலமாக்களுக்கிடையிலான கருத்து வேறுபாடு மற்றும் ஈகோ பிரச்சனையினாலா?
ஊர் முழுக்க ஒரே பெருநாள் இல்லாமல் இன்று கோழி வியாபாரிகள் கூட “முதலாளி அந்தாளுங்களுக்கு என்னைக்கு பெருநாள்?” எனக் கேட்டு நம்மை தலை குனியச் செய்யும் இக்கொடுமைக்கு எப்போதுதான் விடிவுகாலம் வருமோ...?
பெருநாள் பிறை குறித்து இதயம் சுமக்கும் இனிய நினைவுகள் ஆயிரம் இருந்தபோதிலும் இது போன்ற இதயம் கனக்கும் ஒரு சில நினைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இனி வருங்காலங்களில், எல்லோர் கண்ணுக்கும் ஒரே பிறை தென்பட அந்த வல்லோனை வேண்டி பிரார்த்திப்போமாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross