Re:... posted byyahya.mohideen (dubai)[10 November 2013] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31346
ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் என்ற நபிமொழிக்கேற்ப, நமதூரின் இருபெரும் மதரஸாக்களின் ஆலிம்கள் கூடி விவாதித்து உம்மத்துகளுக்கு அறிவிக்கும் முடிவை மனதார ஏற்போம், வழிபடுவோம்.
நபி மூசா (அலை) அவர்களை நபியென ஏற்றும், கேள்விக்குமேல் பல கேள்விகள் கேட்டும், விதண்டாவாதம் செய்தும், சீரழிந்து சின்னாபின்னமான கூட்டத்தினர் போல் ஆகாமல், ஒட்டுமொத்தமாக ஆலிம்களின் முடிவுக்கு இணங்கினால், அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் நிச்சயம் நமக்கு உண்டு.
ஒரு சமுதாயத்தை நேர்வழியில் அழைத்து செல்லும் கடமை ஆலிம்களுக்கு உள்ளது. அந்த ஆலிம்களை மதித்து அவர்களின் கூற்றை ஏற்றால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என நம்புகிறோம்.
ஆனால், அந்த ஆலிம்கள், சமூகத்தில் இருக்கிற குறைபாடுகளை, நன்முறையில் களைய முயற்சி செய்தல் அவசியம். நபிமார்களில் யாருமே, அவரவர் உம்மத்துகளை நேர்வழியில் அழைப்பதற்கு மேற்கண்ட யுக்தியை தான் கையாண்டார்களே தவிர, அவர்களையும், அவர்களின் செயல்களையும் கேலியும், கிண்டலும் சக நபிமார்களை இழித்தும் பழித்தும் பேசியதாக நாம் படிக்கவில்லை..
நாம் அறிந்தவரையில், 1989 அல்லது 1990ம் ஆண்டுமுதல் தான் நமதூரில் முதன்முதலாக இரு பெருநாட்கள் என அறிவிக்கப்பட்டது. 1985களில் நமதூருக்கு புதிதாக அறிமுகமான ஒரு கொள்கை சாராரின் 'பரிணாம வளர்ச்சியின்' ஒரு பகுதிதான் இரு பெருநாட்கள் உருவான கதை. ஒரு புதிய கொள்கையை அறிமுகம் செய்தவர், அவர்கூற்றுப்படி, உம்மத்துகள் மத்தியில் இன்னென்ன வழிகேடுகள் நிறைந்துள்ளன, இவற்றை மாற்ற முயற்சி மேற்கொள்வோம் வாருங்கள் என்று சக ஆலிம்களையும் அணுகியிருந்தால் உண்மையிலேயே அவர் போற்றப்படவேண்டியவர். மாறாக சக ஆலிம்களை, இழித்தும் பழித்தும், நிந்தித்தும், பேசினால், இது தான் நபிமார்கள் செய்தஅழைப்புப் பணியா?
உலகில் எங்கு பிறை காணப்பட்டாலும் அதை எற்றுகொல்ள்ளலாம் என்ற நிலையில் இருப்பவர்களிடம் - 'உங்களுக்கு பிறை தேடவேண்டும்' என்ற பொறுப்பும் கடமையும் இல்லையோ என்று கேட்கத் தோன்றுகிறது.
வானவியலை முறையாக கற்றுத்தேர்ந்த ஒருமார்க்க அறிஞர் மர்ஹூம் நஹ்வி செய்யிது நூஹு ஆலிம் அவர்கள்.
நமதூரில் நெடுங்காலமாக இருந்த பாங்கு நேர பிரச்சினைக்கு ஒரு முயற்சி எடுத்து தீர்வு கண்டது இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF). சற்றொப்ப 30 வருடங்களுக்கு முன், நமதூரின் அணைத்து ஆலிம்களையும் அழைத்து மஜ்லிசுல் புஹாரிஷரீப் சபையில் அமர்த்தி, விவாதித்து மேற்கூறிய ஆலிம் அவர்களின் கணக்கீட்டுப்படி நமதூரின் தொழுகை நேரங்களை முறைப்படுதிக்கொள்வது என்று ஏக மனதாக முடிவு செய்தனர்.
இம்முடிவை, நமதூரின் இருபெரும் கல்விக்கேந்திரங்களான ஜாவியா மற்றும் மஹ்ளரா நிர்வாகிகள் சரியென ஒப்புதல் அளித்தனர்.
இக்கணக்கீட்டு முறையே இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது. இதுபோன்றே இன்றைய பிறை கணக்கீடு முறையையும், முறையாக அணுகினால் இன்ஷா அல்லாஹ் இதற்கும் ஒரு தீர்வு பிறக்கும்.
ஆலிம்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் என்றென்றைக்கும் உண்டு. ஏன்? இமாம்கள் மத்தியிலும்இருந்தன, இன்னும் சொல்லப்போனால் நபிமார்கள் மத்தியிலும் இருந்தன. இக்கருத்து வேறுபாடுகளை அல்லாஹ் குரானிலும் பதிவு செய்துள்ளான்.
நாம் விரும்புவதெல்லாம், நம் ஊரின் சங்கைக்குரிய ஆலிம்கள் அனைவரும் ஒன்றுகூடி, அவர்களின் கருத்துகளை குரான் மற்றும் ஹதீத் அடிப்படையில் முன்வைத்து ஒரு தீர்க்கமான முடிவை சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பதுதான். மாறாக, வெவ்வேறு திசைகளில் தங்களின் முகங்களை திருப்பிக்கொண்டு உயிரனைய ஷரியத்தின் விசயங்களை சொல்லும் முறையில்தான் நாம் மாற்றத்தை விரும்புகிறோம்
ஒவ்வொரு பிரச்சினைக்கும் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை அணுகி தீர்வு காண்பது அறிவுடைமை. அதுபோல்தான் இப்பிரச்னைக்கும் தீர்வு எட்டப்படவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
நம்முடைய ஆசையும், எதிர்பார்ப்பும் ஆலிம்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்பதுதான். எல்லா ஆலிம்களும் ஒன்றுகூடி விவாதித்து, தேவையெனில், அறிவியல் துறைசார்ந்த நிபுணர்களையும் அழைத்து, அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து இறுதியில், அறிவியல் கூற்றுப்படி நம்முடைய கணக்கீட்டு முறையை செயல்படுத்துவோம், அல்லது இக்கணக்கீடுமுறை குரான், ஹதீத் ஒளியில் நின்றும் வேறுபடுகிறது. எனவே, இந்தந்த அடிப்படையில் இன்றைக்கு நோன்பின் முதல் நாள் அல்லது பெருநாள் என்று சமூகத்திற்கு அறிவிக்கும் முறையைதான் விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.
மொத்தத்தில் அணைத்து ஆலிம்களும் ஒன்றுபட்டு அறிவிக்கும் முடிவே நம் விருப்பமும், எதிர்பார்ப்பும். இவ்விருப்பமும், எதிர்பார்ப்பும் நடக்காது என்ற அவநம்பிக்கை எனக்கு கொஞ்சமும் இல்லை. நிச்சயம் நடக்கும் என்ற மேலென்ணமே ஓங்குகிறது. இதற்கு, மேற்கூறப்பட்ட YUF முயற்சியே சான்று.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை எல்லா விஷயங்களிலும் ஒன்றுபடுத்துவானாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross