செய்தி: டிச. 28 மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு மற்றும் இளம்பிறை எழுச்சிப் பேரணிக்கு 10 பேருந்துகளில் செல்ல முடிவு! நகர முஸ்லிம் லீக் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்ஷா அல்லாஹ் வந்து விடு! posted bykavimagan m.s.abdul kader (doha...qatar)[11 November 2013] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 31360
அன்னைத் தமிழகத்தில்
அரசு வேலைகளில்
இஸ்லாமியர்களுக்கான
இட ஒதுக்கீடு
மூன்றரை விழுக்காடு ....
இதைப் பெற பட்ட பாடு
எழுத்தில் சொல்ல அடங்காது.....
பாவிகள் சதியில் சிக்கிய வலையில்
பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்
பலி ஆடுகளாய் ஆக்கப்பட்டு
சிறைச் சாலைகளில்
சிக்கியவர்கள் மட்டும்
முப்பத்தைந்து விழுக்காடு...
முள்ளில் தைத்த சாக்காடு....
இன்னும் எதற்கடா
சிறை நிரப்பும் போராட்டம்....
சிக்கிச் சீரழிந்து
சின்னாபின்னம் ஆகியது
போதாதா என் தோழா?
பொல்லாத விதிதானா?
காராக் கிரகங்கள் தேவையில்லை
கல்விக் கூடங்களே நமது எல்லை.....
நிரப்பிடுவோம் பள்ளிகளை
நிரம்பிடுவோம் பள்ளி வாசல்களில்....
மதரசாக்களை நிறைத்திடுவோம்
மக்கள் மனங்களில் நிறைந்திடுவோம்...
மஹல்லா ஜமாஅத்தை மதித்திடுவோம்
மதவெறி என்றும் எதிர்த்திடுவோம்!
இந்திய தேசம் எம் தேசம்
ஒருமைப் பாட்டினை காத்திடுவோம்...
ஒருதாய் பிள்ளைகள் அனைவருமே
ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திடுவோம்....
தீன் குலத் தோழா திருச்சியிலே
திசம்பர் இருபத் தெட்டினிலெ
இளம்பிறை மாநில மாநாட்டில்
இதயம் எல்லாம் ஒன்றிணைந்து
உரிமை கீதம் இசைத்திடவே
பேரா சிரியரின் அழைப்பேற்றே
இன்ஷா அல்லாஹ் வந்து விடு
இது நம் கடமை உறுதி கொடு!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross