Re:...தீர்வு posted byT.S.A. Aboothahir (chennai)[13 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31409
பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
மழையில்லா காலங்களில் அவற்றை அழைத்துக்கொண்டுபோய் தானே மழைக்காக துஆ செய்கிறோம்.
பிராணிகளோடும் பிரியமாக நடந்து கொள்ளச் சொன்ன பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் கரிசனம் நம் கண்களை பனிக்கச் செய்கின்றன.
மாடுகளே நீங்கள் என்ன செய்வீர்கள் இப்போது மனுநீதி சோழன் ஆட்சியும் இல்லையே,
சாலை ஓரங்களில் செல்லும் இரு சக்கர ஓட்டிகளின் உயிருக்கே உத்திரவாதம் இல்லாத இந்த அவசர உலகில் மாடுகளே உங்களின் நிலை நிச்சயம் பரிதாபம் தான்.
மாடுகளே நீங்கள் எங்களுக்கு உதவிய காலங்கள் முடிந்து போய் விட்டது, இன்று நாங்கள் மாருதிகளில் வாகனிக்கிறோம். எங்கள் வாகனங்களை parking செய்யவே வசூலிக்கிறார்கள், பாவம் உங்களுக்கு எங்கள் இதயங்களில் இடம் உண்டே தவிர இல்லங்களில் இல்லை.
மாடுகளைப் பூட்டி வண்டிகளில் வாகனித்த காலங்கள் மறந்து விட்டது. எனவே தான் இப்போதெல்லாம் நீங்கள் எங்களுக்கு இடையூறாக தெரிகிறீர்கள். எங்கள் வாகனங்கள் உங்களை வதை செய்கின்றன..
என்ன செய்வது, தனக்கு வயது வந்து விட்ட பிறகு வயது முதிர்ந்து விட்ட பெற்றோரையே பிள்ளைகள் வதை செய்யும் நன்றி கெட்ட இக்காலத்தில் நீங்கள் செய்த உதவிகளை நினைவு படுத்த நேரம் எங்கே இருக்கிறது?
உங்கள் உரங்கள் தான் எங்களை உரமாக வாழ வைத்தது, செயற்கை உரங்கள் வந்து விட்ட பிறகு தான் எங்களுக்கு செயற்கை சுவாசங்கள், பலப்பல நோய்கள்.
நீங்கள் ஒரு காலத்தில் எங்களுக்கு உதவினீர்கள் உண்மைதான், உதவிய காலங்களை நாங்கள் மறக்கவில்லை, ஆனால் எங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களே இன்று முதியோர் இல்லத்தில், நீங்கள் மட்டும் எங்களுடனா?
இருங்கள் கொஞ்சம் யோசிக்கலாம், பெட்ரோல் விலை போகிற போக்கைப் பார்த்தால் திரும்ப உங்கள் உதவி தேவையாகலாம்.
யானைக்கொரு காலம் வந்தால் பூனைகொரு காலம் வராமலா போகும் யானைகள் புத்துணர்வு முகாம்களுக்கு அரசு அனுசரணை போல மாடுகள் மறு வாழ்வு திட்டம் எதாவது வருகிறதா பார்க்கலாம்.
உயிரினங்களை வளர்ப்பது பெரிதல்ல முறையாக பராமரிக்க வேண்டும், நமதூரிலேயே இப்படி என்றால் அதிக மக்கள் வசிக்கும், வாகன நெரிசல் மிகுந்த பட்டணங்களில் ஆடு மாடுகளை பராமரிப்பது எப்படி?
மாட்டை காப்பதற்காக ஓட்டுனர் முயற்சித்திருந்தால் பல மனித உயிர்கள் அங்கே பலியாகியிருக்கலாம். அல்லாஹ் காப்பாத்தினான்.
மனிதர்களே ஒருவரை ஒருவர் உரசாமல் நடக்க முடியாத அளவு நெருக்கடி மிகுந்துவிட்ட இக்காலங்களில் ஆடு மாடுகள் நடப்பதற்கு எங்கே இடம் உள்ளது?
ஆடு மாடுகள் மேயும் புல்வெளித் தரைகள் எல்லாம் ரியல் எஸ்டேட் முதலாளிமார்களின் உதவிகளோடு? கட்டிடங்களாக மாறி விட்ட பிறகு ஆடு மாடுகள் மேய்வதற்கு எங்கே இடம் உள்ளது?
மனிதன் குடிப்பதற்கே விலைக்கு தண்ணீர் வாங்கும் இந்த வினோத உலகில் தாகத்தோடு அலையும் மாடுகளுக்கு தண்ணீர் தர யார் தயார்?
மினரல் கேன் தண்ணீரை மகன் அதிகமாக குடிப்பதை ஆத்திரத்தோடு பார்க்கும் தகப்பர்கள் மிகுந்து விட்ட இக்காலத்தில் மாடுகளுக்கு தண்ணீர் தர எங்கே போவது?
மாதம் மும்மாரி பொழிந்த காலங்கள் மாறிப் போய் விட்ட இக்காலத்தில் மனிதனே தண்ணீருக்கு ஏங்குகிறான். மாடுகளுக்கு எங்கே?
ஆறு குளம் எரி வாய்க்கால்களில் எல்லாம் தண்ணீர் எங்கே ஓடுகிறது நகைச்சுவை நடிகர் விவேக் சொல்வது போல மணல் அல்லும் லாரிகள் தானே ஓடுகின்றன.
பங்களா போன்ற வீடு, வீட்டுக்குப் பின் தோட்டம் துறவு, ஆடு மாடு கட்ட வளவு, கோழி அடைக்க கூடு என்ற காலங்கள் கடந்து மனிதர்கள் வசிக்கும் வீடுகளே கோழிக்கூடு போல சுருங்கிவிட்ட இக்காலத்தில் மாடுகளை எங்கே போய் கட்டுவது
மனிதர்கள் குடியிருக்க அடுக்கு மாடி குடியிருப்புகளை (plot) தேடும் போது மாடுகள் குடியிருக்க எங்கே இடம் தேடுவது?
இப்படியாக சிந்திக்கையில் ஆடு மாடுகள் வளர்ப்பதிலும் அவை பெருகுவதிலும் பல இடையூறுகள் இருக்கவே செய்கின்றன.
தண்ணீர்
உணவு
இடம்
மருத்துவம்
என மனிதர்களுக்கு தேவையான அத்தனை தேவைகளும் அவற்றிற்கு உண்டு.
இவை அனைத்தையும் கவனித்து பராமரிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
அரசு கிடங்குகளில் போதிய பராமரிப்பு அற்ற நிலையில் நோயுற்று மாடுகள் மரணிப்பது ஊடகங்களில் செய்திகளாக வெளி வருவதில்லை. இப்படியாக பல அசாத்திய கூறுகள் உண்டு.
தீர்வு.
முறைப்படி அறுப்பது குர்பானி, அகீகா என அல்லாஹ்விற்காக அறுத்து பலியிடுவது, அவற்றை மனிதர்கள் முறையோடு உண்ணுவது என இஸ்லாம் கூறும் வழிகளே இவற்றிற்கான தீர்வு. அதுவே ஜீவகாருண்யம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross