அறிவியல் வளர்ச்சி - படைத்தவனையும் விஞ்சாமல் இருக்க வேண்டும். posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[13 November 2013] IP: 119.*.*.* China | Comment Reference Number: 31426
உலகம் எவ்வளோவோ முன்னேறிவிட்டது. கல்வி கற்றவர்கள் நிறைந்த இந்த காலத்தில் கல்லாதவர்க்கு மதிப்பே இல்லை. முன்னர் படிப்பறிவில்லாதவர்களை 'மாடு மேய்க்க' தான் தகுதியானவன் என்று சொல்வர். இப்போதோ மாடு மேய்ப்பதற்கு கூட உயந்த பட்ச கல்வித்தகுதி பார்க்கின்றனர்.ஆரம்பக்க் கல்வியான ' அ' 'ஆ' 'இ' 'ஈ' சொல்லித்தந்த ஆசிரியர்களைவிட நாம் தற்போது அதிகம் கல்வி கற்றிருப்பதால் அவர்களை காட்டிலும் நாமே உயர்ந்தவர்கள். காலம் போகிற போக்கை பார்த்தால் 'பள்ளிக்கூடம்கூட இனி நமக்கு தேவைபடாது . புத்தகங்கள்தான் இருக்கிறதே, நாமே படித்து நாமே தேர்வு எழுதி, நமக்கு நாமே பாஸ் மார்க் போட்டுக்கொள்ளவேண்டியதுதான் . நமக்கு இனி யாரும் கற்றுத்தர தேவை இல்லை. நாமாகவே படித்து நாமாகவே புரிந்து கொள்ள வேண்டியதுதான்.
'குர்ஆன்' ஐயும் அதேபோன்று நாமே படித்து நாமே விளங்கிக்கொள்ள வேண்டியதுதான்.வாப்பா சொல்லியோ உலமாக்கள் சொல்லியோ நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் . 2 ம் வகுப்பு வரை தேறியவர்கள் எல்லாம் இனி உலமாக்கள் ஆக முடியாது என்று சொன்னால் , உலமாக்களுக்கும் குறைந்த பட்ச கல்வித்தகுதியோ அல்லது நுழைவு தேர்வோ வைக்க வேண்டியதுதான். இந்த நடைமுறைய பின்பற்றினால் இனி 'MBA ' அல்லது 'MCA ' படித்தவர்கள் மட்டுமே உலமாக்கள் ஆக முடியும். அதன்பிறகாவது உலமாக்கள் சொல்வதை கேட்பார்களா என்று பார்ப்போம்!
நம்முடைய தந்தை யார் என்பதை நம் தாய் அடையாளம் சொன்னால் கேட்கலாமா? அல்லது அதையும் DNA டெஸ்ட் போட்டு பார்த்துதான் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமா ? அறிவியல்தான் வளர்ந்துவிட்டதே! தாய் கூட சில சமயம் பொய் சொல்வதற்கு வாய்ப்புள்ளது. தாய் சொல்வதைவிட அறிவியல் உறுதியாக சொல்லிவிடும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross