Re:... posted byV. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou)[21 November 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 31618
பல வருடங்களுக்குமுன் சென்னையில் நடந்தது . ஒரு ஓவிய கண் காட்சி . ஏகப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது . ஓவியம் என்றால் , மனிதன் , விலங்கு , பறவை , மரங்கள் இவற்றின் உருவங்கள் , மலைகள் , நீர்வீழ்ச்சி , சந்திரன் சூரியன் அல்லது ஏதாவது பொருள்கள் எதையாவது வரைந்து இருக்க வேண்டும் . ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்ல வேண்டும் , தத்துவங்கள் பேச வேண்டும் . அல்லது ஏதாவது சம்பவங்கள் பற்றி ஓவியமாக வரைந்து இருக்க வேண்டும் .
பலவிதமான ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தது . எல்லோரும் ரசித்தார்கள் ஒரே ஒரு ஓவியத்தை தவிர . அந்த ஓவியம் ஏதோ குழந்தைகளின் கிறுக்கல் போல இருந்தது . எந்த ஒரு கதையையும் , தத்துவத்தையும் அந்த ஓவியத்தால் சொல்ல முடியவில்லை ஆனால் அந்த ஓவியத்தை ஒரு பழுத்த பெரியவர் மெய்மறந்து பார்த்துகொண்டிருந்தார் . என்னமா வரைஞ்சிருக்கான் பாரு என்று கமென்ட் வேறு .
இறுதியில் ஓவியர்களை பேட்டி கண்டார்கள் . ஒவ்வொருவரும் தமது ஓவியம் சொல்லும் தத்துவங்களை சொன்னார்கள் . இறுதியாக அந்த கிறுக்கல் ஓவியம் . ஆரம்ப பள்ளி செல்லும் சிறுவன் கையில் கிடைத்த பென்சிலை கொண்டு கிறுக்கி வைத்திருக்கிறான் . அதை அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அவனது உறவினர் , " சும்மாங்காட்டி " எடுத்து இங்கே வைத்துவிட்டார் . எல்லோரும் புறக்கணித்த அந்த கிறுக்கலை , அந்த பெரியவர் மட்டும் , அது சொல்லும் தத்துவம் என்னவென்றே தெரியாமல் ரசித்திருக்கிறார் .
படத்தை படமாக பார்த்தவருக்கு என்ன புரிந்ததோ என்று ஒரு கருத்தாளர் கேட்கிறார் . புரிந்து கொண்டு பார்பதற்கு இந்த படத்தில் அப்படி என்ன விசேசம் உள்ளது என்பதுதான் புரியாத புதிர் .
Vilack SMA , சீச்சியாவ் , குவாங்க்ஜோ , சீன மக்கள் குடியரசு .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross