6. Re:... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A)[21 November 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31610
மிக அருமையான ஒளிப்பதிவு, இங்கு சூரியன் அஸ்தமாகும் போது காணக்கிடைக்கும் காட்சி.
அது சரி வானத்தை பார்த்துவிட்டு பூமியை பார்த்தால் சகிக்க முடியவில்லையே! குப்பை மலை. நாம் இளமையில் விளையாடி அனுபவித்த நமது அழகிய கடற்கரை தானா இது. இதற்கு தீர்வு இல்லையா?
வையகத்தையாழ்பவனே, உன்னுடைய சிறிய "ரம்மியமான" வெளிப்பாடாக இருந்தாலும் அது வான்கடலிலோ, வையகத் திடலிலோ உதயமாகும் பொழுது அதை இப்புவியிலுள்ள நாங்கள் புரக்கண்ணாலு, அகக் கண்ணாலும் கண்டு களிப்புற கடமைப்பட்டுள்ளோம்!
அல்லாஹ்வின் அழகிய வெளிப்பாடு உருவத்தில் சிறியதாக இருந்தாலும், அதன் உன்னதத்தின் உயிர் முடுச்சி அவிழும்போது அவனின் அழகிய இயற்க்கை கருணையை அள்ளிப்பருக,
பூமியுள்ள புண்ணியர்கள் பொருத்திருக்கிறார்களா, என பரிசோதிக்க புரக்கண்ணில் தெரியும் இந்த சிறிய வண்ணத்
தோரணங்ளைக்கூட தன் தூரிகையால் தெளிக்கத் தொடங்கி விட்டானோ?
சபாஷ்.... இப்ராஹிம் இப்னு நௌசாத் பாய்! சூரியன் உதிக்கும்
திசையின் வலது பக்க மலை மீது தனது பெரிய காலை ஊன்றியவாறு, நீண்ட வாலுடன் கெத்தாகக் காட்சி தரும் ராட்சஷ சேவலின் வடிவம் தெரிகிறதா?
எனக்கென்னவோ கருணாநிதியின் அலங்காரமும்,ஜெயலலிதாவின்
அகங்காரமும்,இந்தப் படத்தில் சிம்பாலிக்காக காட்டப்பட்டதைப்
போன்று தோன்றுகிறது......
10. Re:... posted byV. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou)[21 November 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 31618
பல வருடங்களுக்குமுன் சென்னையில் நடந்தது . ஒரு ஓவிய கண் காட்சி . ஏகப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது . ஓவியம் என்றால் , மனிதன் , விலங்கு , பறவை , மரங்கள் இவற்றின் உருவங்கள் , மலைகள் , நீர்வீழ்ச்சி , சந்திரன் சூரியன் அல்லது ஏதாவது பொருள்கள் எதையாவது வரைந்து இருக்க வேண்டும் . ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்ல வேண்டும் , தத்துவங்கள் பேச வேண்டும் . அல்லது ஏதாவது சம்பவங்கள் பற்றி ஓவியமாக வரைந்து இருக்க வேண்டும் .
பலவிதமான ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தது . எல்லோரும் ரசித்தார்கள் ஒரே ஒரு ஓவியத்தை தவிர . அந்த ஓவியம் ஏதோ குழந்தைகளின் கிறுக்கல் போல இருந்தது . எந்த ஒரு கதையையும் , தத்துவத்தையும் அந்த ஓவியத்தால் சொல்ல முடியவில்லை ஆனால் அந்த ஓவியத்தை ஒரு பழுத்த பெரியவர் மெய்மறந்து பார்த்துகொண்டிருந்தார் . என்னமா வரைஞ்சிருக்கான் பாரு என்று கமென்ட் வேறு .
இறுதியில் ஓவியர்களை பேட்டி கண்டார்கள் . ஒவ்வொருவரும் தமது ஓவியம் சொல்லும் தத்துவங்களை சொன்னார்கள் . இறுதியாக அந்த கிறுக்கல் ஓவியம் . ஆரம்ப பள்ளி செல்லும் சிறுவன் கையில் கிடைத்த பென்சிலை கொண்டு கிறுக்கி வைத்திருக்கிறான் . அதை அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அவனது உறவினர் , " சும்மாங்காட்டி " எடுத்து இங்கே வைத்துவிட்டார் . எல்லோரும் புறக்கணித்த அந்த கிறுக்கலை , அந்த பெரியவர் மட்டும் , அது சொல்லும் தத்துவம் என்னவென்றே தெரியாமல் ரசித்திருக்கிறார் .
படத்தை படமாக பார்த்தவருக்கு என்ன புரிந்ததோ என்று ஒரு கருத்தாளர் கேட்கிறார் . புரிந்து கொண்டு பார்பதற்கு இந்த படத்தில் அப்படி என்ன விசேசம் உள்ளது என்பதுதான் புரியாத புதிர் .
Vilack SMA , சீச்சியாவ் , குவாங்க்ஜோ , சீன மக்கள் குடியரசு .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross