அக்டோபர் 2013 முடிய, 2013 - 2014 நிதியாண்டில் காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 1 கோடியே , 80 லட்சத்து, 19
ஆயிரத்து, 331 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO
நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், TNUDF நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைகளுக்கு 15
லட்சத்து , 784 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 1 கோடியே, 65 லட்சத்து , 18 ஆயிரத்து 547 ரூபாய் - நகராட்சி
வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தின் 73வது மற்றும் 74வது திருத்தங்களை தொடர்ந்து, மாநில அரசு - தான் மாநில அளவில் வசூல் செய்யும் வரியில்
கணிசமான பங்கினை உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கவேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது.
மாநிலத்தின் வரிகள் மூலமான சொந்த வருவாயில் (STATE'S OWN TAX REVENUE) சுமார் 10 சதவீதம் பங்கினை, தமிழக அரசு - உள்ளாட்சி
மன்றங்களுக்கு மாற்றுகிறது. இவ்வாண்டு (2013-14) தமிழக அரசின் வரிகள் மூலமான சொந்த வருவாய் (SOTR) சுமார் 86,000 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை உருவாக்கப்படும், மாநில நிதிகுழுக்கள் (STATE FINANCE
COMMISSION) - எத்தனை சதவீத பங்கு உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும், பஞ்சாயத்துகளுக்கும், நகராட்சிகளுக்கும் எந்த சதவீதத்தில்
மானியங்கள் பிரித்து வழங்கப்படவேண்டும் போன்ற பரிந்துரைகளை - வழங்குகின்றன. இதன் மூலம், ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட அளவிலான
வளர்ச்சிப்பணிகள், உள்ளாட்சி அளவில் முடிவு செய்யப்படும் வாய்ப்பு உருவாகிறது.
தமிழகத்தில் முதல் மாநில நிதிக்குழு 1997 முதல் 2002 வரை அமலில் இருந்தது. இரண்டாம் மாநில நிதிக்குழு 2002 முதல் 2007 வரை அமலில்
இருந்தது. மூன்றாம் மாநில நிதிக்குழு 2007 முதல் 2012 வரை அமலில் இருந்தது.
நான்காவது மாநில நிதிக்குழு - டிசம்பர் 1, 2009 இல் உருவாக்கப்பட்டது. ஆறு பேர்
கொண்ட இந்த குழு, தனது அறிக்கையை செப்டம்பர் 30, 2011 அன்று தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை தயார் செய்ய, இந்த குழு, பல ஆய்வுகளை
மேற்கொண்டது. மேலும் - பல கலந்தாலோசனை கூட்டங்கள் - பல்வேறு அரசு துறை அதிகாரிகளுடன் - நடத்தப்பட்டன.
தமிழக சட்டப்பேரவையில் இந்த
அறிக்கை, அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல் ஆகியவை - மே 14, 2013 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
நான்காவது மாநில நிதிக்குழு உறுப்பினர்கள் ...
மாநிலத்தின் வரிகள் மூலமான சொந்த வருவாயில் (STATE'S OWN TAX REVENUE), உள்ளாட்சி மன்றங்களுடன் பகிர்ந்துக்கொள்ள உறுதி செய்யப்பட்ட
10 சதவீத தொகையில், 54 சதவீத தொகையை கிராமப்புற உள்ளாட்சிமன்றங்களுக்கும், 46 சதவீத தொகையை நகர்புற உள்ளாட்சி மன்றங்களுக்கும்
பிரித்து அளித்திட நான்காவது மாநில திட்டக்குழு பரிந்துரை செய்தது.
மேலும் - நகர்புற உள்ளாட்சி மன்றகளுக்கான பங்கீடு, மாநகராட்சிகளுக்கு 40 சதவீதம், நகராட்சிகளுக்கு 29 சதவீதம், டவுன் பஞ்சாயத்துகளுக்கு 31
சதவீதம் என்ற அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர - ஒவ்வொரு உள்ளாட்சி மன்றமும் பெறும் மானியம், 80 சதவீதம் - அதன் மக்கள் தொகை அடிப்படையிலும், 15 சதவீதம் - உள்ளாட்சி
மன்ற பகுதியின் பரப்பளவு அடிப்படையிலும், 5 சதவீதம் - உள்ளாட்சி மன்றத்தின் கடன் பாக்கி அடிப்படையிலும் பிரித்து வழங்கப்படுகிறது.
இவ்வாண்டு ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் நகர்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் விபரம் தற்போது
வெளியிடப்பட்டுள்ளது. இதில் - உள்ளாட்சிமன்றங்களின் கடன் வகைக்கான 5 சதவீத பங்கு மானியம், கூடிய விபரங்கள் முழுமையாக
கிடைக்கபெறாததால், உள்ளாட்சி மன்றங்களுக்கு பின்னர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2013 - அக்டோபர் 2013
அரசு உதவி தொகை (A) - 1,80,19,331
பிடித்தம் (Deductions) (B) - 15,00,784
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 1,65,18,547
அக்டோபர் 2013
அரசு உதவி தொகை (A) - 25,97,081
பிடித்தம் (Deductions) (B) - 1,74,154
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 24,22,924
ஆகஸ்ட் 2013 - செப்டம்பர் 2013
அரசு உதவி தொகை (A) - 51,94,162
பிடித்தம் (Deductions) (B) - 4,55,518
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 47,38,644
ஜூலை 2013
அரசு உதவி தொகை (A) - 25,57,022
பிடித்தம் (Deductions) (B) - 2,74,002
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 22,83,020
ஜூன் 2013
அரசு உதவி தொகை (A) - 25,57,022
பிடித்தம் (Deductions) (B) - 2,69,711
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 22,87,311
ஏப்ரல் 2013 - மே 2013
அரசு உதவி தொகை (A) - 51,14,04
பிடித்தம் (Deductions) (B) - 3,27,496
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 47,86,548
2012 - 2013 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 13
லட்சத்து , 58 ஆயிரத்து 772 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO
நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 95
லட்சத்து , 61 ஆயிரத்து 339 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 17 லட்சத்து , 97 ஆயிரத்து 433 ரூபாய்
- நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2012 - மார்ச் 2013
அரசு உதவி தொகை (A) - 3,13,58,772
பிடித்தம் (Deductions) (B) - 95,61,339
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,17,97,433
2011 - 2012 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 27
ஆயிரத்து 208 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு
செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 58 லட்சத்து , 67
ஆயிரத்து 380 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 41 லட்சத்து , 59 ஆயிரத்து 828 ரூபாய் -
நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2011 - மார்ச் 2012
அரசு உதவி தொகை (A) - 3,00,27,208
பிடித்தம் (Deductions) (B) - 58,67,380
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,41,59,828
தகவல்:
நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 10:00 pm / 20.11.2013] |